2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு! அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம் - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Friday, December 29, 2017

2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு! அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் (Index No. 8147710) பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


புலோலி, புற்றளை, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பௌதிக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ள யாழ்.வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி மாணவன் துவாரகனுக்கு, பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் P.மைக்கல் (Index No. 8149356) இயந்திரவியல் தொழினுட்பத் துறையில் அகில இலங்கை ரீதியில் பத்தாம் இடத்தையும், மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும், தயாளன் தயாநிதி (Index No. 8147922) உயிரியல் விஞ்ஞானத் துறையில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

உயிரியல் முறைமை தொழில்நுட்ப பிரிவில் யாழ். வேம்படி மாணவி தேசிய மட்டத்தில் மூன்றாமிடம்
2017ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி கமலேஸ்வரி செந்தில்நாதன் உயிரியல் முறைமை தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

காரைநகரைச் சேர்ந்த மாணவியான அவர் உயிரியல் முறைமை தொழிநுட்பப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று (இசற் புள்ளி- 3.1990) பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்றார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)