அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச கண்டக்குழிக்குளத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுத்த தமிழ் அதிகாரிகள்! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, December 29, 2017

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச கண்டக்குழிக்குளத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுத்த தமிழ் அதிகாரிகள்!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய நில பிரதேசங்கள் முஸ்லிம் தரப்புகளால் சட்டவிரோதமாக கையக்கப்படுத்தபடும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அரங்கேற்றப்பட்டு கொண்டே வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தமிழ் அரச அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு துணை போவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைகுட்பட்ட சரணபாலபுரம் பிரதேசத்துடன் இணைந்த பழமையான கண்டக்குழிக்குளம் தற்போது முஸ்லிம்களால் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயளாளர் ஜெகதீசனும் , ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னால் தவிசாளருமான இரத்தினவேலுமே முழுப்பொறுப்பாகும்.
மேலும் சரணபாலபுரத்தை பதூர் நகராகவும், கண்டக்குளிக்குளத்தை பதூர் குளமாகவும் பெயர் மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இக்குளத்தின் வரலாற்றின் படி , ஆரம்பத்தில் தர்மரெட்ணம் வன்னியனாரின் குடும்ப பராமரிப்பில் இருந்து வந்துள்ளது, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் அவர் கொழும்பில் சென்று குடியேற இக்குளமானது கவனிப்பாரற்ற நிலையில் இருந்து வந்துள்ளது.
அத்துடன் இக்குளமானது 70 ஏக்கர் விவசாய காணியின் நீர் பாய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இது 2009 வரையே, அதன்பின் தற்போது இக்குளம் இருந்தது தெரியாத அளவிற்கு பற்றைகள் அழிக்கப்பட்டு மண்ணிட்டு நிரப்பப்பட்டு சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுகின்றது,
இது எவ்வாறு என்று ஆராய்கின்ற போது 2009-07-17 அன்று பதவிக்கு வந்த ஆலையடிவேம்பு பிரதேச செயளாளர் ஜெகதீசன் மற்றும் முன்னால் தவிசாளர் இரத்தினவேல் ஆகியோரே போலியான உறுதி இலக்கமிட்டு கள்ள வழிகளில் திட்டமிட்டு சதி செய்து முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துள்ளதாக தெரிய வருகிறது.

தமிழர்களின் பரம்பரை விடயங்களை சட்டவிரோதமாக முஸ்லிம்களுக்கு தார வார்த்து கொடுத்து விட்டு மக்கள் சேவை செய்ததாக கூறி கொள்வதில் பயன் எதுவும் இல்லை. பாரம்பரிய தமிழ் பிரதேசங்களை முஸ்லிம் பிரதேசங்களாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த உடனயாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)