யாழ் கோப்பாய், ஏனைய சில வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதிகளின் லீலைகள் அம்பலம்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Monday, December 25, 2017

யாழ் கோப்பாய், ஏனைய சில வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதிகளின் லீலைகள் அம்பலம்!!!

யாழ் கோப்பாய் அரசினர் வைத்தியசாலையில் பணியாற்றிய அம்புலன்ஸ் சாரதி ஒருவரின் நடவடிக்கை தொடர்பாக நாம் எமது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். குறித்த செய்தியை அடுத்து தற்போது கோப்பாய் வைத்தியசாலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வரும்போது பல திருகுதாளங்கள் அம்பலமாகியுள்ளன.
கோப்பாய் வைத்தியசாலையில் அனோகரன் என்ற சாரதி நிரந்தரமாக பணியாற்றி வருகின்றாராம். குறித்த சாரதி தனது மேலதிக நேரக் கொடுப்பனவுகள் உட்பட்ட சலுகைகளை பெறுவதற்காக அந்த வைத்தியசாலைக்கு  கடமைக்கு வரும் ஏனைய அம்புலன்ஸ் சாரதிகளை அங்கிருந்து திட்டமிட்டு துரத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்கு கடமைக்கு வரும் ஏனைய அம்புலன்ஸ் சாரதிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தும் பாலியல் அவதுாறுகளை அந்தச் சாரதிகள் மீது சுமத்தியும் அவர்களை அங்கிருந்து துரத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றாராம் அனோகரன்ன் என்ற அம்புலனஸ் சாரதி.
அனோகரன் இவ்வாறு திட்டமிட்டு சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுக்கு பலியாகியவரே நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்ட அந்த வைத்தியசாலையில் கடமையாற்றி சாரதி என எமது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கோப்பாய் வைத்தியசாலைக்கு அருகிலேயே சொந்த இடமாக உள்ள அனோகரன் குறித்த வைத்தியசாலைக்கு வரும் ஏனைய அம்புலன்ஸ் சாரதிகளை மிகத் திட்டமிட்டு காய்களை நகர்த்தி அப்புறப்படுத்தி வருகின்றாராம்.
கோப்பாய் வைத்தியசாலைக்கு அருகில் வசிக்கும் 17 வயது நிரம்பிய ஒரு யுவதியை அந்த வைத்தியசாலைக்கு புதிதாக வந்த இன்னொரு அம்புலன்ஸ் சாரதியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து அவளுடன் பாலியல் ரீதியில் பழகச் செய்து அவளைக் கொண்டு அந்தச் சாரதி தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்து குறித்த சாரதியை வேலையில் இருந்து அகற்றியுள்ளதும் வெளிப்பட்டுள்ளது.
அத்துடன் அனோகரன் தனக்கு வழக்கப்பட்ட விடுதியில் சாராயம் மற்றும் மாவா போதைப் பாக்கு போன்றவற்றை வைத்திருப்பது தொடர்பாகவும் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.
அனோகரன் யாழ் அம்புலன்ஸ் சாரதிகள் சங்கத்தில் அங்கத்துவராக இருக்கின்றார். குறித்த சங்கத்தின் பொறுப்பாளராக தெல்லிப்பளை அம்புலன்ஸ் சாரதி இருந்துவருகின்றாராம். குறித்த சாரதி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொழும்புக்கு அம்புலன்ஸ்சை கொண்டு செல்வதால் அந்த வண்டியின் எரிபொருளில் பெருமளவு வெட்டுக் குத்துக்களை செய்து குறைந்தது ஆறாயிரம் ரூபா வரை ஒவ்வொரு தடவையும் கொழும்பு செல்லும் போது அரச பணத்தைச் சூறையாடி வருகின்றாராம்.

ஏனைய சாரதிகள் எரிபொருள் முறைகேடுகளில் ஈடுபடுவதிலும் பார்க்க அம்புலன்ஸ் சாரதிகள் எரிபொருள் முறைகேடுகளில் ஈடுபடுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். . ஏனெனின் எரிபொருள் கூடுதலாக விரயமாகும் என்பதற்காக அம்புலன்சை வேகமாக ஓட்டமாட்டார்கள். இவ்வாறான நிலையில் உயிர் ஆபத்தில் உள்ள நோயளர்களை காப்பாற்ற இவர்கள் முன்வரமாட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகளில் குறித்த சாரதிகள் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இதே போலவே அனோகரனும் செயற்படுவதாகவும் அதனால் சாரதி சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அனோகரனுக்கு சார்பாக தொழிற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் அம்புலன்ஸ் சாரதிகளில் பெருமளவானோர் எந்தவித இடமாற்றமும் இன்றி தொடர்ச்சியாக குறித்த வைத்தியசாலைகளில் பணியாற்றுவதால் ஏராளமான பாலியல் முறைகேடுகளும் ஊழல் துஸ்பிரயோகங்களும் இடம்பெற்று வருவதாக சம்மந்தப்பட்ட தரப்புகள் தெரிவிக்கின்றன.

கோப்பாய் அம்புலன்ஸ் சாரதிகளின் நடவடிக்கை தொடர்பாக குறித்த சாரதிகளுடன் தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் அவர்கள் எமது தொலைபேசி அழைப்புக்களை நிராகரித்ததால் அவர்களது கருத்துக்களைப் பெற முடியவில்லை. தமது பக்க நியாயங்களை அவர்கள் தெரிவித்தால் நாம் அவற்றைக் கருத்தில் எடுக்க முடியும்.
[https://www.facebook.com/newjaffnaboys] எமது  முகப்பக்கம் ஊடக அவர்கள் தமது நியாயப்பாட்டை தெரிவிக்கலாம். 

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)