Header Ads

speakermusicspeaker
Headlines News:
Home » » சுமந்திரன்க்கு சிங்கள விசேட அதிரடி பணியால் கடுமையான பாதுகாப்பு!!!

சுமந்திரன்க்கு சிங்கள விசேட அதிரடி பணியால் கடுமையான பாதுகாப்பு!!!

Editor By Yazhpanam on புதன், 27 டிசம்பர், 2017 | பிற்பகல் 1:10:00


சுமந்திரன் தாக்கப்படலாம் என்பதாலேயே பாதுகாப்பு அதிகரிப்பு!

STF preview
திரு. சுமந்திரன்க்கு சிங்கள விசேட அதிரடி பணியால் கடுமையான பாதுகாப்பு தமிழ் தாயகத்தில் கொடுக்கப்படுகிறது

இது உண்மை: "ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது.தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்."
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி என்பது புதிதான விடயமல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.சுமந்திரன் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நபர், மக்கள் மத்தியில் சென்றால் அடி விழும் என்பதற்காக அவருக்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம், அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ, இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது.தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.
இந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3ஆவது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள்.ஆனால், அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது. யார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிப்பது தனக்கு கவலையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
UNPSumanthiran
Rajah's comments in Colombo Telegraph on March 7, 2017 "Traitorous Sumanthiran along with Sampanthan said Tamils problems will be solved in 2016. Questions from Tamils is why TNA is supporting extension not other way around Sumanthiran should say why he has not signed. Probably he does not know what his electorate is asking since he is insulated from them by STF purportedly to protect him from an imaginary murder attempt by non-existent LTTE or conspiring army intelligence."
சுருக்கமான தமிழ் மொழி பெயர்ப்பு: இராணுவ புலனாய்வு சதியும், 
இல்லாத புலிகளின் கற்பனை கொலை முயற்சியும் என்று சொல்லி சுமந்திரனை சிங்கள விசேட அதிர்வு படையினால் பாதுகாப்பதினால் இவர் எப்படி மக்களிடம் அவர்களின் கருத்து கேட்க முடியும்.
It appears, with everything taken into account Mr. Sumanthiran is a Sinhala operator. 
எல்லாவற்றையும் பார்த்தால், சுமந்திரன் ஒரு சிங்கள சேவையாளராக உள்ளார்.

இணைப்பு: பதிவு இணையம் 
Vilambaram:
loading...

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

உங்கள் கருத்துக்கள் என்ன?

Featured

Contact

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2018. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modify By TPI Distributed by Radio. | Proudly powered by Blogger