யாழ் கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை-வானிலை காலநிலையம் அறிவிப்பு!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 5, 2017

யாழ் கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை-வானிலை காலநிலையம் அறிவிப்பு!!!

வடக்கு கிழக்கு கரையோர கடற்பிரதேசத்தில் இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று இடர்முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

தற்போது எதிர்பார்க்கப்படும் சீரற்ற காலநிலையின் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவது பாதுகாப்பற்றது என்று  மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சீரற்ற காலநிலையை கரையோரப்பிரதேசத்திலுள்ள மக்களும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோரும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்மராட்சிப் பகுதி கடற்தொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என சாவகச்சேரி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இவ் அறிவிப்பை சாவகச்சேரி பிரதேச செயலக இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

வட இலங்கைக்கு அப்பால் 200 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலை கொண்டுள்ள புயல் இன்று இரவு தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்புக் காரணமாக தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்பார்கப் படும் காற்று யாழ் மாவட்டத்தின் ஏனைய கரையோரங்களிலும் தாக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.


No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)