யாழ் புளொட் அலுவலகத்திலிருந்து துப்பாக்கிகள், வாள்கள் மீட்பு! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, December 20, 2017

யாழ் புளொட் அலுவலகத்திலிருந்து துப்பாக்கிகள், வாள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து பயன்படுத்தக்க துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள்,ரவைகள் மற்றும் வாள்கள் என்பன இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவற்றைப் பதுக்கிவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.
"யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார்.

அவரது வீட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வசித்து வந்தார். அவர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளார்.
வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றனர்.
அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் காணப்பட்டன.
ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன" என்று பொலிஸார் மேலும் கூறினர்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)