சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு செல்லும் தமிழ் வாசிகளிகள் கவனத்திற்கு !!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 5, 2017

சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு செல்லும் தமிழ் வாசிகளிகள் கவனத்திற்கு !!!

தரகர்களால் தரப்படும் வீசா மற்றும் விமான பயணச் சீட்டை பயன்படுத்தி சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக வௌிநாடு செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு, யாழ் பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.


யாழில் உள்ள பெரும்பாலானவர்கள் விடுமுறையை கழிக்க மற்றும் புனிதப் பயணங்களுக்காக வௌிநாட்டுக்கு செல்ல பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீசா மற்றும் விமான பயண அனுமதிச் சீட்டுக்கள் போலியானவை என, பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இதுபோன்று தரகர்களால் ஏமாற்றப்பட்ட பலர், யாழின் பல பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.இதற்கமைய, நேற்றையதினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றில், குடும்பத்திலுள்ள மூவர் இந்தியாவுக்கு செல்வதற்காக, ஒரு இலட்சத்து இருபத்து எட்டாயிரம் ரூபா தரகருக்கு வழங்கியுள்ளதாக, கூறியுள்ளனர்.எனினும், குறித்த தரகரால் வழங்கப்பட்ட விமானப் பயணச் சீட்டு, ஹோட்டல் அரை ஒதுக்கப்பட்டமைக்கான சீட்டு மற்றும் வீசா என்பன போலியானது என, முறைப்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன், அவர்களால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களும் போலியானவை எனக் கூறியுள்ள பொலிஸார், அதிலுள்ள முகவரியில், அதுபோன்றதொரு நிறுவனம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, விடுமுறைக்காக வௌிநாடு செல்ல விரும்புபவர்கள், குறைந்த பணத்தை கருத்தில் கொண்டு இதுபோன்ற மோசடிகளில் சிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


நன்றி: நியூ ஜவ்னா.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)