இலங்கைக்கு பிரிட்டன் ஆயுதம்: தடுக்கும்படி எம்பியிடம் தமிழர் குழு கோரிக்கை!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Monday, January 22, 2018

இலங்கைக்கு பிரிட்டன் ஆயுதம்: தடுக்கும்படி எம்பியிடம் தமிழர் குழு கோரிக்கை!!!

லண்டன், ஜன. 19- 
இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்தக்கோரி புலம்பெயர் தமிழர்களின் குழு ஒன்று அந்நாட்டின் தொழிற் கட்சி எம்.பி.யான போப் பிளக்மனைச் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.  
பிரிட்டன் தொடர்ந்து இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு, ஸ்காட்லாந்து காவல்துறை இலங்கையின் விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சியளித்தது தொடர்பான ஆதாரங்களையும் அவரிடம் சமர்ப்பித்தனர்.
மேலும் சுமார் அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெற்ற ஆட்கடத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்ரவதை முகாம்கள் போன்றவை குறித்தும் அவர்கள் இந்தச் சந்திப்பின் போது எம்.பி.க்கு விளக்கினர்.

புலம்பெயர் தமிழர்களான சிவரஞ்சன் கணபதி  தலைமையில், சிவதீபன் நகுலேஸ்வரன், புவிதா பாலச்சந்திரன், அஷந்தன் தியாகராஜா ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் இலங்கைக்கான ஆயுத விற்பனை எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது.
ஆயுத விற்பனை குறித்து போப் பிளக்மன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தக அமைச்சரின் கவனத்திற்கு இந்த விஷயத்தை எடுத்து செல்வதாகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தில்  பங்கு பற்றி பேசவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதிரடிப் படைப் படைப் பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில் இப்பயிற்சியானது முறைப்படி கண்காணிக்கப் படுகிறதா? என்பது குறித்துத்  தாம் ஆராய்வதாகவும் கூறினார்.
இதே வேளை, 2012 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கெமரூனுடன் தான் இலங்கை சென்றிருந்த வேளை, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் நிலைப்பாடு குறித்து தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை தாமும் பிரதமரும் விரும்பியதாகவும் அரச அதிகாரிகள் உடன் இருந்தமையால் தமிழ்க் கூட்டணியுடனான சந்திப்பு சாத்தியமாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழர் தகவல் நடுவத்தின் பிரதான ஏற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை இலங்கைக்கான ஆயுத விற்பனையைத் தடை செய்வது தொடர்பில்  10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தம்முடைய குழு சந்திப்புகளை மேற்கொண்டு உள்ளதாகவும்,  மேற்படி சந்திப்புகள் யாவும் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்  இன அழிப்புக்கு எதிரான  தமிழர் தகவல் நடுவகத்தின் இந்த முன்னெடுப்பானது, பிரிட்டனில் மட்டுமின்றி ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. ஏனைய  அனைத்துலக நாடுகளிலும் இது போன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்து இலங்கைக்கான அனைத்துலக ஆயுத விற்பனைகள் அனைத்தையும் நிறுத்துவதே தமது குறிக்கோள் எனவும் விளக்கினார்.
தொடர்ந்து ஆயுத விற்பனை நிறுத்துதல் தொடர்பாக இயக்கத்தில் இணைய விரும்பும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பிரிட்டன் தகவல் நடுவகத்தினை தொடர்பு கொள்ளும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)