Most Popular
speakermusicspeaker

வெள்ளி, 26 ஜனவரி, 2018

தமிழர் காணிகளில் சிங்கள மக்களுக்காக முல்லைத்தீவில் புதிய நீர்பாசன திட்டம்!!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக “ஹிபுல் ஓயா”என்னும் பெயரில் பாரிய நீர்பான திட்டம் ஒன்றை நிர்மாணித்துள்ளதாக வடமாகாண சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் குளங்களை சுவீகரித்து நடைமுறைப்படுத்தவும், ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று நடைபெற்ற வடமாகாண சபையின் 115 வது அமர்வில் விசேட கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவந்து கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயங்களை குறிப்பி்ட்டுள்ளா்ர.
எல்லைக் கிராமங்களில் மண்கிண்டி மலை, ஆமையன்குளம், முந்திரிகை குளம், சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை, கென் பண்ணை, வெடிவைத்த கல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் சில கிராமங்கள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களாகும்.
இவை தற்போது சிங்கள குடியேற்றங்களாக மாற்றப்பட்டு சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்னும் பெயரில் பாரிய நீர்பாசன திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடை குளம், வெள்ளான் குளம், ஒயாமடு குளம், ஆகிய குளங்கள் மூடப்படுகின்றன.
மேலும், இந்த குளங்களின் நீர்பாசனத்தின் ஊடாக செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்படுகிறது.
திட்டத்தின் பிரதான இலக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு பகுதியின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களையும், விவசாய நிலங்களையும் சுவீகரித்து அங்கே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் விவசாயம் செய்வதற்கான நீரை வழங்கும் நிலை உள்ளது.
ஹிபுல் ஓயா திட்டதின் ஊடாக புதிதாக ஒரு தொகுதி சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதையும் இலக்காக கொண்டுள்ளனர்.
சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்பாசன திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஒயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் அந்த குளங்களின் கீழான நீர்பானம் பெறும் விவசாய நிலங்களை மூடி மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும்.
குறித்த காணிகளுக்கான ஆவணங்களையும் மக்கள் வைத்திருக்கும் நிலையில், மயில்குளம் என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ காணி ஆவணங்களை வழங்கினார்.
அந்த மயில் குளம் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும், இனிமேல் குடியேற்றப்படும் சிங்கள மக்களும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காவே இந்த நீர்பாசன திட்டம் தொடங்கப்படுகின்றது என்று வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
இது மிக ஆபத்தான ஒன்றாகும். மிக வேகமாக பரவிவரும் சிங்கள குடியேற்றம் இந்த திட்டத்தின் ஊடாக மேலும் வலுப்பெற்று மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள மயமாக்கப்படும் அபாயம் உள்ளது.
1948 ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் ஊடாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டது.
அதனால் 1959 ம் ஆண்டு அம்பாறை சிங்கள பிரதேசமும், 1977ம் ஆண்டு சேருவில சிங்கள பிரதேசமும் உருவாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பல சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன.
இது நல்ல உதாரணம் இதேபோல் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புதிய சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்படும்.
இலங்கை அரசாங்கம் தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட 3336 குடும்பங்களை சேர்ந்த 11189 நபர்களை கொண்ட சிங்கள மக்களுக்கு ஒரு மதரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியாகவும் செயற்படுகிறது என்றார் அவர்.
Share:

உடல்நலம் குடும்பம்

முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? அப்போ இத படிங்க..!!!

முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? அப்போ இத படிங்க..!!!

பொதுவாக இரவு உணவினை எடுக்கும் போதே சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரே உணவு காலையில்... பகல் நேரத்தில் சாப்பிட்டால் ஒரு ...
Read Mores »
வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்..!!

வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்..!!


சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும் வகையில் இருக்கும். இதனை மறைப்பதற...
உங்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்..!!!

உங்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்..!!!


உடலின் சிறப்பான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமானது. நார்ச்சத்து என்பது எளிதில் செரிமானமாகாத கார்போஹைட்ரேட்டுகளாகும். இச்சத்து ஒ...

யாழ்பாவாணன் வெளியீட்டகம்

Post Top Ad

loading...




இந்த தளத்தில் விளம்பரங்கள் பிரசுரிக்க தொடர்புகளுக்கு: news@yazhpanam.com

Support

Google+ Badge

Ordered List

Over 600,000+ Readers Get fresh content from FastBlog