புலிகள் தமிழீழத்தை கைவிட்ட விவகாரம்- மேடையில் சுடச்சுட பதிலடி கொடுத்த ஜனநாயக போராளிகள் - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Monday, January 29, 2018

புலிகள் தமிழீழத்தை கைவிட்ட விவகாரம்- மேடையில் சுடச்சுட பதிலடி கொடுத்த ஜனநாயக போராளிகள்

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் ஆதரவுக்கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி மேடையிலிருந்த சுமந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

அண்மையில் கனடா சென்ற சுமந்திரன் அங்கு பேசும்போது ‘நாங்கள் அரசுடன் பேசும்போது விமர்சிக்கும் நீங்கள், விடுதலைப்புலிகள் அரசுடன் பேசும் போது தமிழீழத்தை கைவிட்டுத்தானே பேசப்போனார்கள் அவர்களை ஏன் நீங்கள் கேள்வி கேட்கவில்லை’ என கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு சுமந்திரன் பங்குபற்றிய பிரச்சார கூட்டத்தில் பதிலளித்த துளசி, தலைவர் தமிழீழத்தை கைவிட்டு பேசவில்லை பேசிப்பயனில்லை அடித்துத்தான் பெறவேண்டுமென போராடிய நாங்கள் எம்மை பலப்படுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாகவே அரசுடன் பேசினோம் என பதிலளித்தார். இதை அவர் கூறியபோது மக்கள் கை தட்டி ஆரவாரித்திருந்தார்கள்.‌

இதன் பின் சுமந்திரன் எம்.பி, துளசி அமர்ந்திருந்த கதிரைக்கு சென்று, “நாங்கள் விரைவில் சந்தித்து பேசுவோம். அப்படி பேசினால்தான் நமக்கிடையிலுள்ள இடைவெளியை தவிர்த்துகொள்ளலாம்“ என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)