இராணுவப் புலனாய்வாளர்களைப் புலிகளாக மாற்றி சாதனை படைத்தது கூட்டமைப்பு!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, January 3, 2018

இராணுவப் புலனாய்வாளர்களைப் புலிகளாக மாற்றி சாதனை படைத்தது கூட்டமைப்பு!!!

தமிழீழ விடுதலைப் புலிகளால் தோற்றம் பெற வைக்கப்பட்டதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. புலிகள் அரசியல் வழியில் வராது வன்முறையில் ஈடுபடுகின்றனர் என, சிங்கள அரசு வெளி உலகங்களுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ,அந்தப் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக புலிகளால் ஒரு காய் நகர்த்தல் செய்யப்பட்டது. அந்த நகர்த்தலின் போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாகியது.

புலிகளால், மண்டையில் போடப்பட வேண்டியவர்கள் என பட்டடியல் இட்டு அப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்களைக் கூட புலிகள் தமது காய் நகர்த்தலுக்காக அந்த அரசியல் கூட்டமைப்பில் இணைத்திருந்தனர். தமது அரசியல் நடவடிக்கைகளை கூட்டமைப்பின் ஊடாக செயற்படுத்துவதற்காகவும் வெளி உலகிற்கு தமது அரசியல் கட்சியாக கூட்டமைப்பைக் காட்டவுமே புலிகள் குறித்த கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் நிறுத்தினர்.

புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என வடக்கு கிழக்கு தமிழர்கள் அறிந்து அக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களுக்கு கண்ணை மூடி ஆதரவு கொடுத்து அவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்பிவைத்தனர்.
அதன் பின்னர் ஏற்பட்ட அரசு, விடுதலைப் புலிகளின் இறுதி யுத்தத்தின் பின்னர் புலிகளின் பலம் இல்லாது செய்யபபட்டதுடன் யுத்தமும் முடிவுக்கு வந்தது.
இறுதி யுத்தத்தில் சரணடைந்த ஆயிரக்கணக்கான புலிகள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் சில வருடங்களின் பின்  2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது  புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய விடுதலைப் புலிகள் ஒன்றினைந்து அரசியல் நீரோட்டத்தில் ஈடுபட நினைத்து தம்மால் தோற்றம் பெற வைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நாடினர்.
அந் நேரத்தில் குறித்த கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் புலிகளை மிகவும் கொச்சையாக வர்ணித்ததுடன் அவர்களை இராணுவப் புலனாய்வாளர்கள் எனவும் போலிப் பிரச்சாரத்தை மேற் கொண்டிருந்தனர். இதனையடுத்து புலிகள் ஜனநாயகப் போராளிகள் கட்சியை உருவாக்கி அதை மக்கள் மத்தியில் நிலை நிறுத்தத் தொடங்கியிருந்தனர். தற்போது குறித்த கட்சிக்கான ஆதரவு அலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

தற்போது கூட்டமைப்பினரின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இந் நிலையில் கூட்டமைப்பினருக்கு மீண்டும் புலிகளிடம் இருந்து ஊட்டம் பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. புலிகளுக்கு இருக்கும் செல்வாக்கு என்ன என்பதை கூட்டமைப்பினர் அறிந்துள்ளனர். இதனாலேயே தற்போது புலிகளை மீண்டும் அரவணைக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பினர் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஜனநாயகப் போராளிகள் கட்சியை கூட்டமைப்பினர் தமக்குள் உள் வாங்கி உள்ளூராட்சித் தேர்தலில் தமது கட்சி சார்பாக போட்டியிட வைத்துள்ளனர்.

இங்கு ஜனநாயகப் போராளிகளின் அருகே சுமந்திரனும் மாவையும் நிற்க வேண்டிய நிலையில் உள்ள புகைப்படங்கள் காட்டப்பட்டுள்ளது.
இது வேற வாய் !! அது நாறல் வாய் என்ற நிலையில் கூட்டமைப்பின்  ஜனநாயகப் போராளிகள் கட்சியை சேர்ந்து தமது அரசியல் பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளனர். இனிமேல் நடக்கப் போவது என்ன என்பதை ஜனநாயகப் போராளிகள் கட்சியினரே செயற்பாட்டில் காட்ட வேண்டும்.

நன்றி: NJ

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)