கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களின் முன்னால் நிற்கும் சிலர் அங்குள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களை குளோபல் லைவ் லங்கா பிரிமிட் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமும் மாலை வேளைகளில் அலுவலகங்களுக்கு முன்னால் காணப்படும் நபர்கள் கடமைமுடிந்து வெளியேறும் அலுவலர்களுடன் இலாவகமாகப் பேசி அவர்களது முகவரிகளைப் பெற்று பின்னர் வீடுகளுக்குச் சென்று பிரிமிட் நடவடிக்கையில் பங்குபற்றுமாறு கேட்டு வருகின்றனர. அவர்களின் வாக்குஜாலத்தில் மயங்கும் பெண் அலுவலர்கள் பிரமிட் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதங்களில் சாவகச்சேரி பகுதியில் உள்ள கட்டடமொன்றில் பிரமிட் அமைப்பின் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோது பெருமளவான பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக நகரப் பகுதி மக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து சாவகச்சேரி நீதிமன்றின் உத்தரவின் பேரில் தென்மராட்சி பிரதேசத்தில் பிரமிட் அமைப்பின் பரப்புரை நிறுத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச அலுவலர்களைக் குறிவைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர் எனவும் அரச அலுவலர்கள் பலர் தெரிவித்தனர்.
நன்றி: NJ
No comments:
Post a Comment
இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com