அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணை கொடுமைப்படுத்திய தமிழ் தம்பதியினர்! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Thursday, February 8, 2018

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணை கொடுமைப்படுத்திய தமிழ் தம்பதியினர்!

மெல்பேர்ன் நகரில் Mount Waverleyஇல் உள்ள தனது வீட்டில் 8 ஆண்டுகளாக பெண் ஒருவரை அடிமையாக அடைத்து வைத்திருந்ததாக கந்தசாமி கண்ணன் மற்றும் அவரது மனைவி குமுதினி கண்ணன் ஆகியோர் நேற்று மெல்போர்ன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்
இதன்போது அவர்கள் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்த நிலையில் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வழக்கு விசாரணை இம்மாதம் இறுதியில் நடைபெறும் எனவும் மெல்போர்ன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு கண்ணன் தம்பதியினரின் மூன்று குழந்தைகளை பராமரிக்கவென இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் விசாவில் குறித்த தமிழ் பெண் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
வீட்டை விட்டுத் தனியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை எனவும், ஊதியமும் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த பெண் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 5:30 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 3:30 மணி வரை எவ்வித ஓய்வுமின்றி அப்பெண் பணிபுரிய வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 2015ஆம் ஆண்டில் கண்ணன் குடும்பத்தினர் ஒரு மாத காலம் சுற்றுலா சென்ற நிலையில், அந்த காலப்பகுதியில் உணவு ஏதும் இன்றி, மயங்கிய நிலையில் குளியல் அறையில் குறித்த பெண் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கண்ணன் தம்பதியினர், அப்பெண்ணைத் தனது குடும்பத்தில் ஒருவராகவே நடத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கந்தசாமி கண்ணன் மற்றும் அவரது மனைவி குமுதினி ஆகியோர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)