யாழ் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை- பொலிஸரிடம் சிக்கிய முக்கிய துப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் மாணவனின் சாவு தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய தடயம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேற்படி மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையிலிருந்து அவரால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், “கல்விச் செயற்பாட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை” என குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த குற்றவியல் மற்றும் தடயவியல் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் அந்தக் கடிதத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பலாலி வீதி, கந்தர்மடம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் குறித்த மாணவர் தங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த வீட்டில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
இதேவேளை “தனது சகோதரர் கடந்த காலங்களாக பரீட்சை தொடர்பில் கடும் அழுதத்தில் காணப்பட்டார்” என அவரது மூத்த சகோதரர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

About Yazhpanam

Blogger இயக்குவது.