வவுனியாவில் கையூட்டு பெற்ற (லஞ்சம் வாங்கிய) வன இலாகா அதிகாரி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரியே இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மரம் வெட்டுவதற்கான அனுமதி வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற நிலையிலேயே வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் பகுதியில் வைத்து வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய வன இலாகா அதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை விசாரணையின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com