Most Popular
speakermusicspeaker

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

சாதனை படைத்த இலங்கையின் தமிழ் விஞ்ஞானிக்கு அமோக வரவேற்பு!!!

தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

2018 இற்கான அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சி, தாய்லாந்து மாநாட்டு மண்டபத்தில் 2018.01.01 தொடக்கம் 2018.02.06 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் 97 நாடுகளைச் சேர்ந்த 1800 பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் போட்டியிட்டனர்.
அப்போட்டியில் இலங்கை சம்மாந்துறையைச் சேர்ந்த இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் போட்டியிட்டு சர்வதேச வெண்கல விருதையும் உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் சர்வதேச ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருதையும் பெற்றுக் கொண்டார்.

97 நாடுகளை சேர்ந்த 1800 விஞ்ஞானிகள் போட்டியிட்டனர். இப்போட்டியில் 4 மலேசிய தமிழர்களுடன் சேர்த்து 1 ஈழத் தமிழனாக போட்டி இட்டு வெற்றி அடைந்து உள்ளார்.
இவ் விருது 'கணித உதவியாளன்' எனும் கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் கண்டுபிடிப்புக்கே வழங்கப்பட்டது.
தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை ஶ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை சம்மாந்துறை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கும் இவர் இதுவரை 81 கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளதோடு 31 தேசிய விருதுகளையும் 3 சர்வதேச விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் எமது 'அன்பே சிவம்' அறப்பணி அமைப்பின் தொண்டரும் ஆவார். இவன் தமிழ் ஈழத்தில் வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானி.

இதன்போது கருத்து தெரிவித்த வினோஜ்குமார்,
“எனது இரண்டு கண்களான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கும், சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் மேலும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் எங்கள் அறப்பணி அன்பே சிவத்திற்கும், மற்றும் இன மத பேதமின்றி நாடு கடந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகள்.
என்னுடைய கண்டுபிடிப்பு என்னைப் பொறுத்தவரை தரம் என்பதற்கு அல்ல. உங்கள் அனைவரது ஆசிர்வாதம் மற்றும் ஊக்கப்படுத்தலே மிக முக்கியமாக இருந்தது.

எல்லா இடத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அந்த ஒருசில நல்லவர்களிள் நட்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த விருது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இவ் விருது கிடைத்தது.
புதியவற்றினை ஏற்படுத்தாத தேசம் எழுச்சி பெறாது. எனவே எமது நாட்டில் என்னை விட பல திறமை வாய்ந்த எத்தனையோ பல கண்டுபிடிப்பாளர்கள் இருக்கின்றார்கள்.
இன மத பேதமின்றி அனைவரும் திறமைக்கு மதிப்பு வழங்கினால் மாத்திரமே எமது நாட்டில் புரிந்துணர்வுடன் கூடிய சமாதானமும் அபிவிருத்தியும் அடையும்.

இதனை அரசியலினாலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையினாலோ ஏற்படுத்த முடியாது.” என்று கூறியுள்ளார்.


                                                                                                                                  நன்றி: NJ                          
                                                                                    
Share:

உடல்நலம் குடும்பம்

முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? அப்போ இத படிங்க..!!!

முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? அப்போ இத படிங்க..!!!

பொதுவாக இரவு உணவினை எடுக்கும் போதே சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரே உணவு காலையில்... பகல் நேரத்தில் சாப்பிட்டால் ஒரு ...
Read Mores »
வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்..!!

வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்..!!


சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும் வகையில் இருக்கும். இதனை மறைப்பதற...
உங்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்..!!!

உங்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்..!!!


உடலின் சிறப்பான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமானது. நார்ச்சத்து என்பது எளிதில் செரிமானமாகாத கார்போஹைட்ரேட்டுகளாகும். இச்சத்து ஒ...

யாழ்பாவாணன் வெளியீட்டகம்

Post Top Ad

loading...
இந்த தளத்தில் விளம்பரங்கள் பிரசுரிக்க தொடர்புகளுக்கு: news@yazhpanam.com

Support

Google+ Badge

Ordered List

Over 600,000+ Readers Get fresh content from FastBlog