Header Ads

யாழ் உதயன் பத்திரிகை செய்தியால் யாழ்/ பல்கலை ஆசிரியர் சமூகத்துக்குள் குழப்பம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஆதரவு வழங்குவது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்திற்குள் பாரிய குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
“தமிழரின் கனவு நனவாக வீட்டுக்கு வாக்களிப்போம்” யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் வேண்டுகோள் எனத் தெரிவித்து உதயன் பத்திரிகை இன்றைய தினம் பிரதான செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றுகூடி கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் தமிழரசுக்கடசி ஆதரவாளர்கள் இருவரே யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் என்ற பெயரில் அறிக்கைவிடுத்ததாக தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில் குறித்த அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் குறித்த அறிக்கைக்கு பல்கலைக்கழக சமூகத்துக்கும் தொடர்பில்லை என்றும் அறிக்கைவிடுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முடிவெடுத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.