Header Ads

மழலையைப் போல மரங்களைப் பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகள்; ஆண்டுகள் கடந்தும் அழியாத உண்மை!!

நவம்பர் - 28- 2012 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியும் வருகிறன.
உலகளவில் காடுகளுக்கு நேரும் பேராபத்தை கட்டுப்படுத்தும் முகமாகவே இன்றைய நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
உலக வெப்பமயமாதல் மற்றும் மழை அற்றுப்போதல் போன்ற காரணங்களுக்கு காடழிப்பு ஒரு முக்கியாமான பிரச்சினையாக இருந்துவருகின்றது. பூமியின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கின்ற செயற்பாடாக காடழிப்பு நிகழ்ந்துவருகிறது.
காடுகள் மனிதர்களாலும் இயற்கையாலும் அழிக்கப்படுகின்றன. பாரிய மரங்களை அடியோடு வெட்டிச் சாய்த்தல், காடுகளுக்கு தீ மூட்டுதல் உள்ளிட்ட மனித செயற்பாடுகள் வனங்களின் பாதுகாப்பை சீர்குலைக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரை காடுகள் அதிகம் காணப்படும் மாவட்டங்கள் பரவலாக காணப்படுகின்றன. வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம் நிலப்பரப்பு அளவில் அதிகமான மரங்களால் நிறைந்த மாவட்டமாக விளங்குகின்றது.
யாழ் மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் காணப்பட்டு யாழ்ப்பாணம் பனையின் தனித்துவ பிரதேசமாக விளங்குகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டுப் போரின்போது வடக்கு கிழக்கில் அதிகமான காடழிப்பு நிகழ்ந்தது. குறிப்பாக இராணுவத் தளபாடத் தேவைகளுக்காக அதிகமான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் அதிகமான பனை மரங்களை வெட்டி தமது காவல் அரண்களைப் பலப்படுத்தியதாக கடந்தகால செய்திகள் கூறுகின்றன. அதேபோல மோட்டார் எறிகணைகள் மற்றும் ஆட்லறி உந்து கணைகள் ஏராளமான பனைமரங்களை தலையற்ற முண்டங்களாக மாற்றின.
இலங்கையில் காடுகளைப் பாதுகாக்கும் அமைப்பாக வனவள பாதுகாப்புத் திணைக்களம் விளங்குகின்றது. அதே போல் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களது ”வன வள பாதுகாப்பு பிரிவு” காடுகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தது.
குழந்தையைப் போல மரங்களைப் பாதுகாத்த புலிகள்; ஆண்டுகள் கடந்தும் அழியாத உண்மை!(விடுதலைப் புலிகளின் கொய்யாத்தோட்டம்)
வன்னியில் விடுதலைப் புலிகள் காடுகளைக் காத்தது மட்டுமன்றி புதிதாக காடுகளையும் உருவாக்கிவைத்தனர். குறிப்பாக வன்னிப் பிராந்தியமெங்கும் காணப்படும் தேக்கு மரக் காடுகள் விடுதலைப் புலிகளின் வளர்ப்பாகும். 1990ஆம் ஆண்டளவில் தாண்டிக்குளம் பகுதியில் நடப்பட்ட தேக்குமரக் காடும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாட்டப்பட்ட தேக்கு மரக் காடுகளும் விடுதலைப் புலிகளின் வனவளப் பாதுகாப்பு முகாமைத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இதுமட்டுமன்றி ஏராளமான மா மரங்கள் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை நெடுகிலும் நாட்டப்பட்டதுடன் மர முந்திரிகை மரங்கள் யாழ்ப்பாணம்-மன்னார் நெடுஞ்சாலை நெடுகிலும் நாட்டபட்டன. இவை அனைத்தையும் இன்றும் கூட குறித்த சாலைகளால் பயணிப்பவர்கள் காணலாம்.
யுத்தத்திற்குப் பின்னர் வன்னியிலிருந்த விடுதலைப் புலிகளின் பெரும்பாலான தேக்கு மரக் காடுகள் இராணுவத்தாலும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செல்வாக்கினாலும் அழிக்கப்பட்டதுடன் வெட்டிக் களவாடப்பட்டும் உள்ளன.
1990 காலப்பகுதியில், யாழ் மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் வீதியோரங்களில் அதிகமான பனை மரங்களை நாட்டியிருந்தனர் என்பதற்கு இன்றும் பல வீதிகளின் ஓரங்களில் வரிசையாக நிற்கும் பனை மரங்கள் சாட்சியாக விளங்குகின்றன.
குழந்தையைப் போல மரங்களைப் பாதுகாத்த புலிகள்; ஆண்டுகள் கடந்தும் அழியாத உண்மை!(விடுதலைப் புலிகளின் மர முந்திரிகை)
வன்னியில் யாராவது வீட்டு முற்றத்திலுள்ள மரத்தை வெட்டுவதாயின் விடுதலைப் புலிகளின் வன வளப் பாதுகாப்புப் பிரிவினரின் விசேட அனுமதியைப் பெற வேண்டும். இந்த உத்தரவை மீறிச் செயற்படும் யாராயினும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கடும் யுத்தத்தின்போதும் காடுகள் அதிகமுள்ள இடங்களில் எறிகணைகளையோ மோட்டார் உந்து கணைகளையோ பாவிப்பதிலிருந்து விடுதலைப் புலிகள் வெகுவாகப் பின்வாங்கினர். அவ்வாறான பிரதேசங்களில் படையினருக்கு மிக அருகில் சென்று துப்பாக்கியால் மட்டும் சண்டை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறாக விடுதலைப் புலிகளால் இலங்கையின் வடக்கு கிழக்கின் நிலப்பரப்பு எங்கும் பரந்து காணப்பட்ட காடுகள் அனைத்தும் குழந்தையைப் போல் மிக பத்திரமாக பாதுகாக்கப்பட்டமையை இந்த நாளில் நினைவுகூருகின்றனை சாலப் பொருத்தமாகும்.
x
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.