சம்பள உயர்வு வேண்டாம் என வீதியில் இறங்கிய வைத்தியர்கள்!!!

எது கிடைச்சாலும் போதும் என்று சொல்லாத இனம் நம் மனித இனம் அதிலும் குறிப்பா சம்பள விசயம் என்றால் கண்ண மூடிக்கிட்டு டபிள் ஓகே சொல்லுவோம்.
ஆனா, சம்பள உயர்வு வேண்டாம் என்று போராட்டம் நடைபெறுகிறது.
சமீபத்தில் கனடா நாட்டில் உள்ள கியூபெக் நகர அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே தங்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் இதற்கு மேல் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று அரசுக்கு கனடா டாக்டர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
மருத்துவர்கள் உடனடியாக சம்பள உயர்வை திரும்ப பெற வேண்டும் என கடந்த மாதம் கோரிக்கை விடுத்துள்ளனர்
எங்களைவிட சம்பளம் குறைவாகவும், அதிக உழைப்பும் தந்து கொண்டிருக்கும் நர்ஸ்கள் உள்பட மற்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தாருங்கள் என்றும், எங்களுக்கு இப்போது வழங்கப்படும் சம்பளமே போதுமானது.
என்பதே கியூபெக் நகர மருத்துவர்களின் கோரிக்கையாகும் இதை அரசு ஏற்காததால் 700 க்கும் அதிகமான டாக்டர்கள் ஒன்றினைந்து போராட்டம் நடாத்திவருகின்றனர்.
சக ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்து , எங்கள் நோயாளிகளை சிறப்பாக கவனித்துக் கொண்டால் அதுவே எங்களின் வெற்றி என ஒருமித்த குரலில் கோஷமிடுகின்றனர்.
                                                                                                                           நன்றி: Mojidelano

About Yazhpanam

Blogger இயக்குவது.