ஜனாதிபதிக்கு தந்தையை விடுவிக்க கோரி கடிதம் எழுதிய குழந்தைகள்!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, March 20, 2018

ஜனாதிபதிக்கு தந்தையை விடுவிக்க கோரி கடிதம் எழுதிய குழந்தைகள்!!

தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் தமக்கு உதவுமாறு ஆனந்த சுதாகரனின் இரண்டு குழந்தைகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைப்பதற்கு இன்று  (20) ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கிளிநொச்சி பிரதேச சபைக்கு தெரிவான சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த கடிதத்தை பெற்று அங்கஜன் இராமநாதன் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது. தமது தந்தையை விடுதலை செய்து உதவுமாறு ஜனாதிபதி மாமாவிடம் கோரிக்கையிட்டு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக 13 வயதான கணிதரன் ஆனந்தசுதாகரன் தெரிவித்தார்.


மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது மகள், தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி மருதநகர் பகுதியில் இடம்பெற்றது.
                            

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)