தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அடையும் வரை சிங்கள முஸ்லீம்களின் குடியேற்றத்தை தமிழர் தாயகத்தில் நிறுத்துங்கள்!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Friday, March 16, 2018

தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அடையும் வரை சிங்கள முஸ்லீம்களின் குடியேற்றத்தை தமிழர் தாயகத்தில் நிறுத்துங்கள்!!!

0-02-06-73b1c568a04fdee70627dfb5f6a9efcf89c8d2807b63837b1641d600aa616b5d full
சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை சிறுபான்மை இனத்தவர்களாக தமிழர் தாயகத்தில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறது.
தமிழர்கள் சிறுபான்மை இனத்தவர்களானால் வடக்கு மாகாண ஆட்சி இல்லாமல் ஓர் வலு இழந்த இனமாய் போய்விடும்.
இதன் பின்னர் தமிழர்களுக்கு என தீர்வு என்பது இல்லாமல் போய்விடும்.
எனவே வட மாகாண சபை வட-கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அடையும் வரை சிங்கள முஸ்லீம்களின் குடியேற்றத்தை தமிழர் தாயகத்தில் நிறுத்துங்கள் என தீர்மானம் கொண்டு வரவேண்டும். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வ.மா உறுப்பினரினர்களின் முக்கிய கடமை.
இந்த குறிக்கோளை அடைவதற்கு சிங்கள அரசாங்கம் பல வழிகளில் முயற்சிக்கிறது:
1.தமிழ் தாயகத்தில் இராணுவத்தை வைத்திருப்பதன் மூலம் சிங்களவரின் சனத்தொகை அதிகரித்து வருகிறது.
2.வன்னியிலும் முல்லைத்தீவுலிலும் சிங்களகுடியேற்றம் பெருமளவு நடக்கிறது. இது சிங்களவரின் தொகையை அதிகரிக்கின்றது.
3.சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பல நூறு சிங்கள புத்த கோயில்களை தமிழ் தாயகத்தில் கட்டியெழுப்பியுள்ளது.
4.ஒவ்வொரு கோவில்ளை மையமாக, ஒவ்வொரு கோவில்களினதும் பாதுகாப்பிற்காக இராணுவமும், பூஜைக்காக பிக்குகளும், வழிபாட்க்கு சிங்களவர்களும், கோவில் உள்ள கிராமம் பூர்வீக சிங்களம் கிராமம் என பொய்யாக நிரூபிக்க தொல்லியல் நிபுணர்களும் தெற்கிலிருந்து தமிழ் தாயகத்திற்கு வந்தும், தொடர்ந்தும் வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான நிதி உதவியை சிறிலங்கா அரசாங்கம் செய்து வருக்கின்றது.
5.அரசு, தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம் அமைச்சர்களை பயன்படுத்தி வடக்கில் முஸ்லீம்களை குடியேறி வருகிறார்கள் . இந்த முஸ்லிம்கள் இந்து கோயில்களை உடைக்கும் பணியில் இறங்கி, அவர்கள் தமிழர்களுக்கு எதிரானானவர்கள் என்று காட்டி போரினால் நொந்து உள்ள தமிழர்களை மிரட்டுகிறார்கள்.
எல்லா முஸ்லீம்களும் மோசமானவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் முஸ்லீம் அமைச்சர்கள் தமிழர் பகுதிகளில் கில்லாடி முஸ்லீம்களை கொண்டுவருகிறார்கள்.
இந்த வந்தேறு குடிகளான முஸ்லிம்கள் தேர்தலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். இச் செயல் தமிழரின் அரசியல் வலுவை பலவீனப்படுத்தும்
தமிழர்களின் தாய்நாட்டின் தமிழ்ச் சமுதாயத்தை இல்லாது ஒழிக்கவும் , தமிழரின் அரசியல் வலுவை குறைப்பதற்கும் இது சிங்கள அறிவுஜீவிகளின் சிந்தனையாகும். தமிழர் தாயகத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக உருவாக்குவது மற்றொரு வழியாகும்.
இப்போது நாம் அழிந்து போகும் நேரத்தில் இருக்கிறோம். வட மாகாணசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இதை தடுப்பதற்கும், சர்வதேசத்திக்கு வெளிபடுத்த தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
வட-கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அடையும் வரை சிங்கள முஸ்லீம்களின் குடியேற்றத்தை நிறுத்துங்கள்.
இந்த தீர்மானத்தின் நகலை இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்.
இந்த தீர்மானத்துக்கு அல்லது சிந்தனைக்கு பின்னால் ஒரு இனவாத சிந்தனையும் இருக்கவில்லை. எனவே இதை தப்பாக எடுக்க வேண்டாம்.
இது வட-கிழக்கில் தமிழர்கள் மீது இனப்படுகொலை மற்றும் இன அழிப்பை உண்டு பண்ணாதிருக்கவும், எங்கள் தமிழ் தாயகத்தில் எங்கள் தமிழ் பெரும்பான்மையை பாதுகாக்கவுமே இவை அனைத்தையும் வட மாகாணசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த தீர்மானத்தை கொண்டு வந்தால் நல்ல ஆட்சி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் என்று சொல்வதற்கு சிலர் உள்ளார்கள். இதை மக்கள் அடையாளம் கண்டு வைப்பது அடுத்த தேர்தலுக்கு மிகவும் நல்லது.
இத்தீர்மானம் சிங்களவர்களுக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ தீங்கு விளைவிக்கும் என நினைக்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்கனவே வீடுகள் காணிகள் அவர்கள் ஊரில் உண்டு. இவர்களின் செயல்கள் எல்லாம் புத்ததின் மகாவம்ச போதனைகள். மகாவம்ச போதனை: மற்ற அனைவரையும் (சிங்கள பௌத்தவாதி அல்லாதவர்கள் எல்லோரையும் (தமிழர்களை) - others ) அழிக்க வேண்டும்.
குறிப்பு: இந்த தீர்மானம் அரசியலமைப்பில் பிணைக்கப்படக்கூடியதல்ல. ஆனால் இந்த தீர்மானம் மூலம் சிங்கள-முஸ்லீம் குடியேற்றத்திற்கு 
நாங்கள் எங்கள் வலுவான எதிர்ப்பையும். இது சட்டவிரோதமானது என்பதையும் சொல்கிறோம். 
இது சிங்கள இனப்படுகொலை என்பதையும் உலகிற்கு வெளிப்படுத்துகிறோம். 
மேலே குறிப்பிடப்பட்ட காரணத்திற்காக நாம் இந்த தீர்மானத்தை தீர்க்க வேண்டும்.
நன்றி, 
டிரம்ப்பிற்கான தமிழர்கள் 
Tamils for Trump 

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)