காணாமற் போன இலங்கைப் பெண் டெல்லியில் பலி..! விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, March 23, 2018

காணாமற் போன இலங்கைப் பெண் டெல்லியில் பலி..! விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!!!

தமிழ்நாடு – பெரம்பலூர் ஏதிலிகள் முகாமில் இருந்து காணாமல் போன இலங்கைப் பெண் ஒருவர் குறித்த தீவிரவிசாரணைகளை தமிழக காவற்துறையினர் டெல்லி காவற்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர்.
ரம்யா என்ற 24 வயதான குறித்தப் பெண் கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி முதல் காணாமல் போய் இருந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

விபரத்தை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் படியே குறித்தப் பெண் பெரம்பலூர் முகாமைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு பதிவாகி இருக்கின்றமையும் டெல்லி காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதற்கிடையே ரம்யா டெல்லிக்கு எதற்காக சென்றார்? என்பது குறித்து காவற்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.
ரம்யாவின் காதலன் இலங்கையில் இருந்து சட்ட விரோத படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அவரை சந்திக்க ரம்யா முடிவு செய்து இதற்காக அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி சென்னை சென்றுள்ளார்.
அங்கு ஒரு முகவர் மூலம் தனது பெயரை ஸ்ரீமதி ஹமீரா என மாற்றி போலியாக கடவுச்சீட்டு எடுக்க முயற்சித்துள்ளார். பின்னர், டெல்லி சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லவும் தயாராகி இருக்கிறார்.இந்த நிலையில், டெல்லியில் மகிழூர்தியில் சென்று கொண்டிருந்த போதுதான் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)