யாழ் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளைக் கடத்திய வைத்திய நிபுணர்!! நடந்தது என்ன?.. - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, March 28, 2018

யாழ் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளைக் கடத்திய வைத்திய நிபுணர்!! நடந்தது என்ன?..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக்குழந்தைகளில் ஒரு குழந்தை கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரை நீதிமன்றில் முற்படுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டுள்ளது.

 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காலப்பகுதியில் வல்வெட்டித்துறை கரணவாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பிரசவத்துக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இரட்டைக் | குழந்தைகள் பிறந்ததாகவும் எனினும் மகப்பேற்று நிபுணர்களான பவானி, ஸ்ரீதரன் மற்றும் குணரட்ணம் ஆகியோரின் உதவியுடன் தன்னுடைய ஒரு குழந்தை கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகள் நீண்ட காலம் இடம்பெற்று தற்போது யாழ் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது. கடந்த வழக்குத் தவணையின் போது இவ்வழக்கை சிஐடியினருக்கு பாரப்படுத்துமாறும் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் நீதிவான் கட்டளை பிறப்பித்திருந்தார். எனினும் இன்றைய தினம் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சிஐடியினர் மன்றில் சமூகமாக இருக்கவில்லை.

எனவே அடுத்த வழக்குத் தவணையின் போது பணிப்பாளரை நீதிமன்றில் தோன்றுமாறு நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)