பிரான்சில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து ஐஎஸ் தீவிரவாதி தாக்குதல் !! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Friday, March 23, 2018

பிரான்சில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து ஐஎஸ் தீவிரவாதி தாக்குதல் !!

இன்று(23) காலை பாரிஸின் 'டிரேப்ஸ்' என்ற நகரத்திற்கு அருகே இருக்கும் 'சூப்பர் யூ' என்ற பல்பொருள் அங்காடியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த அங்காடிக்கு வெளியே இருந்த பாதுகாப்பு போலீஸ் நான்கு பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவனால் சுடப்பட்டு இருக்கிறார்கள்.தெற்கு பிரான்சின் Trèbes பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் பிணையக்கைதிகளை பிடித்து வைத்திருந்த பயங்கரவாதி GIGN படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.  பயங்கரவாதியால் மொத்தமாக மூவர் கொல்லப்பட்டும், இருவர் காயமடைந்தும் உள்ளனர். மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய பயங்கரவாதி, இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் சுட்டுக்கொல்லபட்டுள்ளான்.  பயங்கரவாதியால் மொத்தமாக மூவர் கொல்லபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக மகிழுந்து ஓட்டுனர் ஒருவர் சுடப்பட்டு, சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர், நடைபயிற்சி முடித்துவிட்டு தன் சக வீரர்களோடு திரும்பிக்கொண்டிருந்த CRS அதிகாரிகளை நோக்கி சுட்டுள்ளான். அதிகாரிகள் அந்த சமயத்தில் துப்பாக்கிகள் அற்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Carcassonne இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பின்னர் அங்கிருந்து தப்பியோடிய பயங்கரவாதி, CRS படையினரால் துரத்தப்பட, Trèbes, (Aude) இல் உள்ள Super U பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து பிணையக்கைதிகளை பிடித்து வைத்துள்ளான். அங்காடிக்குள் மேலும் இருவரை சுட்டுக்கொன்றதாக அறிய முடிகிறது.  பின்னர் அங்காடியை சுற்றிவளைத்த GIGN, RAiD மற்றும் CRS படையினர், இறுதியாக பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுள்ளனர்.  கொல்லப்பட்ட Redouane Lakdim என பெயருடைய குறித்த 25 வயதுடைய மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவன் எனவும்,  அவனை முன்னதாகவே பிரெஞ்சு உளவுத்துறையினர் நன்கு அறிந்துள்ளனர் எனவும் அறியமுடிகிறது.  கிடைக்கப்பெற்ற மேலதிக தகவல்களில், நவம்பர் 13 தாக்குதலில் கைது செய்யப்பட்ட சாலா அப்தெல்சலாமை விடுவிக்கக்கோரி பயங்கரவாதி கோரிக்கை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தாம் தான் நடத்தியதாக இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் உரிமைகோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.நன்றி:பரிஸ்தமிழ்

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)