ஆசிரியை கணேஸ்வரி தற்கொலை செய்யவில்லை- அடித்துக் கொலை,முல்லைத்தீவில் சம்பவம்.!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Friday, March 23, 2018

ஆசிரியை கணேஸ்வரி தற்கொலை செய்யவில்லை- அடித்துக் கொலை,முல்லைத்தீவில் சம்பவம்.!!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் தனது சகோதரியான ஆசிரியை தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா ஊடகங்கள் வாயிலான இதன் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தகவல் தருகையில்,
10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தர நியமனத்திற்காக தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்ட போதும், நியமனம் கிடைக்காத மன விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை கணவரால் அடித்து கொல்லப்பட்டார்.

நேற்று (20) மாலை 5.30 மணிக்குப் பின்னர் சகோதரியை (ஆசிரியை) கணவர் கனகேஸ்வரன் அடித்து துன்புறுத்தி தூக்கில் தொங்கவிட்டுள்ளார். தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு சகோதரி வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று (20) இரவு ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட தனது சகோதரியின் உடல் இன்று (21) தற்போது வரை மான்சோலை முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணை நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மரண விசாரணையின் போது குறித்த தொண்டர் ஆசிரியையின் மரணம் தற்கொலையாக ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டதாகவும் ஆனால் உறவினர்கள் ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரினால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் மனவிரக்கி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.....

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)