வவுனியாவில் இளம் வயதினருக்கு நடக்கும் பயங்கரம்!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 28, 2018

வவுனியாவில் இளம் வயதினருக்கு நடக்கும் பயங்கரம்!!!

வவுனியாவில் பொதுநிலையங்களை அண்மித்த சில பகுதிகளில் போதைப் பொருள் மாத்திரைகள் பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்படுவது பற்றி பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வவு­னியா ஸ்ரீரா­ம­பு­ரம், பண்டாரிக்­கு­ளம், மகா­ரம்­பைக்­கு­ளம், தோணிக்­கல், ஆகிய பகு­தி­யில் மாத்திரை யொன்று 100 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­ கின்­றது.
குறிப்­பாக 14 முதல் 19வரை­யான பிள்­ளை­க­ளுக்­கும், இளம் வய­து­டைய சில ஆட்டோ சார­தி­கள் வாகன சார­தி­க­ளுக்­கும் விநி­யோ­கிக்­கப்­படுகின்­றது.

இந்த மாத்­தி­ரை­களை உட்­கொண்ட மாண­வர்­கள் மயக்க நிலை கல்­வி­யில் நாட்­ட­மின்மை, ஆன்மிகத்­தில் நாட்­ட­மின்மை, உண­வில் நாட்­ட­மின்மை பெற்­றோர்களுடன் முரண்­ப­டல், சக­பா­டி­க­ளு­டன் முரண்­ப­டல், அடி­த­டி­க­ளில் நாட்­டம் கொண்­டுள்­ளமை போன்ற விளை­வு­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

இத­னால் மாண­வர்­க­ளின் எதிர்­கா­லம் பாதிக்­கப்­ப­டும் எனப் பெற்­றோர்­கள் அச்­சம் தெரி­விக்­கின்­ற­னர். ஏற்­க­னவே வவு­னியா குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் போதை­பொ­ருள் பாக்கு (மாவா) மாண­வர்­க­ளுக்கு விநியோகிக்­கப்­பட் டது.

பெற்­றோர்­க­ளின் அறி­வு­றுத்­த­லின் பிர­கா­ரம் பொலி­ஸார் அப்­ப­கு­தி­யில் பாது­காப்பைப் பலப்­ப­டுத்­தி­யதை­ய­டுத்து போதை விநி­யோ­கம் அந்­தப் பகு­தி­யில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன்­பின்­னர் கடந்த இரண்டு மாதங்­க­ளாக குறித்த பகு­தி­க­ளில் போதைப்­பொ­ருள் மாத்­தி­ரை­கள் இர­க­சி­ய­மாக பிள்­ளை­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படு கிறது.
இதன் விளைவு குறித்து பிள்ளை களுக்கு விழிப்­பு­ணர்­வூட்ட வேண்­டு­மெ­ன­வும், குறித்த பகு­தி­க­ளில் பொலி­ஸார் பாது­காப்பை பலப்­ப­டுத்து வதன் மூலம் இந்­தச் செயற்­பாட்டை மட்­டுப்­ப­டுத்தி உத­வு­மாறு பாதிக்­கப்­பட்ட பெற்­றோர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்றனர்.
(Sample Picture)

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)