இராஜதந்திர கோமாளிகளின் கைகளில் சிக்கி திணறும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம்!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Monday, March 26, 2018

இராஜதந்திர கோமாளிகளின் கைகளில் சிக்கி திணறும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம்!!

இலங்கையின் இறுதி போரில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு இலங்கை அரசை பொறுப்பு கூற வைக்கும் விடயம் தொடர்பில், ஜெனிவாவில் நடைபெற்ற அமர்வில் தமிழ் தரப்புகள் காண்பிக்கும் கோமாளித்தனம் மிகவும் கண்டனத்துக்குரியது.
கூட்டத்தொடரில் பங்கு பற்றிய பிரதிநிதிகளின் செயற்ப்பாடு மிகவும் பிற்போக்கு தனமாக அமைந்திருந்தது. சிங்கள பிரதிநிதிகள் அமைதியாக அமர்ந்திருந்து கருத்துக்களை வெளிப்படுத்திய வேளை எமது பிரதிநிதிகள் ஆவேசப்பட்டு எழுந்து நின்று கூச்சல் இடும் படியாக அவர்களின் கருத்து பரிமாற்றம் இருந்தமை எமது தரப்பின் இராஜதந்திர குறைபாடே ஆகும்.
சிங்கள பிரதிநிதிகள் தாம் அமைதியாக இருந்தபடி , எமது பிரதிநிதிகளை ஆவேசம் கொள்ளும் வண்ணம் நடந்து கொண்ட முறை அவர்கள் எம்மை விட இராஜதந்திர ரீதியில் முன்னேற்றம் பெற்றவர்களாகவே இனங்காட்டியது.
இதன் மூலம் சர்வதேச தரப்புக்கு தமிழ் மக்கள் மிகவும் ஆவேச குணம் உடையவர்கள் என்றும் , அவசர புத்தியில் எப்போதும் வன்முறையை கையில் எடுப்பவர்கள் என்றும் ஒரு செய்தியை எமது பிரதிநிதிகள் மூலமே கூறவைத்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க , பாட்டு பஜனை என்று சுற்றி திரியும் வடக்கு முதல்வர் வேலை பளு என்றும், இராஜதந்திர குரு என்று போற்றப்படும் சுமந்திரன் அமெரிக்க பயணத்தின் காரணத்தாலும் ஜெனிவா இருக்கையை புறக்கணிப்பு செய்துள்ளனர். இந்த நேரத்தில் எது முக்கியம் என்று உணராத இவர்களும் இந்த இராஜதந்திர கோமாளிகளில் அடக்கம் பெறுகின்றனர்.
சரி நிலைமை இப்படி இருக்க , ஜெனிவாவுக்கு சென்ற கஜேந்திரகுமார் ஆடியுள்ள கோமாளி கூத்து மிகவும் எரிச்சல் வர வைப்பதாக உள்ளது. என்ன நோக்கத்திட்கு வந்தோம் என்கின்ற விடயத்தை கூட மறந்து அங்கே புலிகளின் சிறுவர் போராளிகள் பற்றி கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை ஒரு புறமும் , உத்தியோக பூர்வமாக பேச வல்ல ஒரே ஒரு பிரதிநிதி சிறிதரனின் வீணாய் போன ஆங்கிலமும் சேர்ந்து எமது தரப்பை கோமாளி கூட்டமாக காட்டியது என்னவோ உண்மை தான்.
தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக காத்திருக்கும் நீதி கோரலை சர்வதேச சமுகத்தின் முன் ஒப்புவிக்க கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை கேலி கூத்தாக்கிய கோமாளி தமிழ் அரசியல்வாதிகளின் கைகளில் எமது மக்களின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்க போகிறது?.
                                                                                 நன்றி: தமிழ் செய்தி

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)