மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் நேற்று (03) மாலை இடம் பெற்ற பெரும் வாகன விபத்து! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, April 4, 2018

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் நேற்று (03) மாலை இடம் பெற்ற பெரும் வாகன விபத்து!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் நேற்று (03) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் 42 பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

அக்கரைப்பற்றில் இருந்து பொலன்னறுவை சுங்காவில் பகுதியை நோக்கி வந்த தனியார் பேருந்தும் பொலன்னறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த டிப்பர் வாகனமும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியதிலயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் 6 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் 12 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)
(அத தெரண)

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)