வரலாற்று சிறப்பு மிக்க பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் !! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Monday, April 9, 2018

வரலாற்று சிறப்பு மிக்க பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் !!


வரலாற்று சிறப்பு மிக்க பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலயத்தின் பங்குனித்திங்கள் உற்சவம் இன்றையதினம்(09-04-2018) வெகுசிறப்பாக இடம்பெறுகின்றது.
வரலாற்று சிறப்பு மிக்க பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்!
யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ள பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பங்குனி திங்கள் உற்சவத்தின் போதும் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் பக்தா்கள் படையெடுத்து வந்து அம்மனுக்கு பொங்கல் படைத்து தமது நோ்த்திக்கடன்களை தீா்ப்பாா்கள்.
இன்று பங்குனி மாத இறுதி திங்கள் என்ற அடிப்படையில் ஏராளமான பக்தா்கள் வருகை தந்து நோ்த்திக்கடன்களை நிறைவேற்றுவதை பாா்க்ககூடியதாக உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளா் தெரிவித்தாா்.
பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலயம் கி.பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வெள்ளை கற்களால் கட்டப் பெற்றதாக கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்!
1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக இக்கோவிலுக்கு கும்பாபிஷகம் செய்யப்பட்டது. 1952 இல் இருந்து ஆறுகால நித்திய பூசையும் நடந்து வருகிறது.
இந்த ஆலயத்தின் சிறப்பு யாதெனில் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே படைத்து வழிபட்டால் கர்மவினைகளால் கொலை பாதகத்திற்க்கு நிகரான தோஷங்கள் உடையோர் அதனால் வாழ்வில் முன்னேற முடியாமல் தவிப்போர் வாழ்வில் வசந்தம் அடையலாம் என்ற ஐதீகம் உள்ளது
பொங்கல் தலமாகவும், தீர்த்தச்சிறப்பும், மூர்த்திப்பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் விளங்கும் இந்த ஆலயத்திற்கு இலங்கை சென்றால் இக்கோவிலுக்கு வந்து அடியவா்கள் வழிபட்டே செல்வாா்கள்.
ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது.
முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.
வரலாற்று சிறப்பு மிக்க பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்!
வரலாற்று சிறப்பு மிக்க பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்!

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)