முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் மீது தாக்குதல்!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 14, 2018

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் மீது தாக்குதல்!!

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி உறவுகள் போராட்டத்தை மேற்கொண்டுவரும் நிலையில் போராட்டத்தை குழப்பும் முயற்சியே தம்மீதான தாக்குதல் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
401 ஆவது நாளாக தமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு சென்ற மர்ம நபரொருவர் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உறவுகள் மயிரிழையில் காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர் என்பதோடு பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்.
கூடாரத்தை நோக்கி வந்து தண்ணிவாளியினை அடித்து நொருக்கிவிட்டு நேரடியாக வாசலினை தாண்டும்போது உள்ளே நானும் இன்னும் ஒரு தாயாரும் இருந்தோம்.
நான் உணவு அருந்திக்கொண்டிருந்தபோது மற்றைய தாயார் ஏன் வாறியள் என்று கேட்டபோது என்னத்திற்கு இதில் இருக்கின்றீர்கள், ஏன் இருக்கின்றீர்கள், உங்கள் போராட்டம் இனி நடத்த முடியாது என்று தெரிவித்த அந்த நபர் அதன் பின்னர் கெட்ட வார்த்தைகளால் பேசினார்.
நான் ஏன் உள்ளுக்குள் வாறீர்கள் என்று கேட்கும் போதும் உள்நுழைந்த நபர் எனது முகத்தில் உமிழ்ந்தார்.
அதனை ஏன் என்று கேட்க முன்னர் சாப்பாட்டிலும் துப்பிவிட்டு எனக்கு அருகில் இருந்த தடி ஒன்றினை எடுத்துவிட குறித்த நபர் தனது மிதிவண்டியில் இருந்த பையில் இருந்த கத்தியினை எடுத்துகொண்டு வந்து எனக்கும் என்னுடன் இருந்த உறவுகளுக்கும் தாக்க முயற்சித்தார்.
இந்நிலையில் நாங்கள் தப்புவதற்காக அவரை மிரட்டும் போது அவர் எங்கள் கொட்டிலில் இருந்த பானை, கதிரை, மற்றும் நாள் ஒட்டும் பதாதை என்பற்றின் மீது கத்தியால் வெட்டினார்.arrest men
நாங்கள் கொட்டிலில் இருந்து வெளியேறி ஓடிவிட்டோம். பின்னர் அவர் எங்களை கலைத்துக்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நாங்கள் அவர் கையில் வைத்திருந்த கத்தியினை பறித்ததுடன் அவர் கொண்டுந்த மிதிவண்டி மற்றும் பை என்பவற்றை பறித்தோம்.
இந்நிலையில் எங்கள் கொட்டிலில் இருந்த அம்மா ஒருவர் வீதி பாதுகாப்பில் இருந்த பொலீஸாரை உடனடியாக அழைத்து வந்ததையடுத்து அவரையும் அவர் வைத்திருந்த உடமைகளையும் பொலீஸார் கைதுசெய்து மீட்டுகொண்டு சென்றனர்.
இதில் அவர் மனநோயாளியா அல்லது மதுபோதையில் இருந்துள்ளாரா என்று தெரியவில்லை என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)