Header Ads

அலுவலர்களின் பொறுப்பற்ற செயல்கள்- ஏனோதானோ என்ற மனநிலையில் காலம் கழிகிறது!!!

யாரைப் பார்த்தாலும் குறைகூறுவதைத் தவிரவேறு எதுவும் இல்லை என்ற அளவில் தான் நம் நிலைமையுள்ளது.

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள் என அனைத்து அமைப்புகளினதும் பணிகள் திருப்தியாக இல்லை.

மக்களுக்கான சேவைகள் ஒழுங்காக  வழங்கப்படவில்லை. உத்தியோகத்தர்கள் பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர்.

சில அலுவலகங்களுக்குச் சென்றால் பொது மக்களை ஏன் என்று கேட்கிறார்கள் இல்லை.

அதிகாரிகள் சிலரைச் சந்திக்கவே முடிவ தில்லை. அவர்களின் ஆசனங்கள் எப்போதும் வெறுமை.

ஆசனத்தில் அமர்ந்தாலும் பொறுமை யில்லை. அடுத்த  கணமே அங்கிருந்து வெளி யேற வேண்டும் என்ற நினைப்பில் கதிரையின் நுனியில் குந்தியிருப்பதை மட்டுமே காண முடிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் தாராள மாக முன்வைக்கப்படுகின்றன.

இவைதவிர வெளிக்கள உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் போன்றவர்களின் தனிநபர் கோவைகள் சீரற்றுள்ளன.

உரிய காலத்தில் உரிய பதவி உயர்வுகள் சம்பள ஏற்பாடுகள் வழங்கப்படவில்லை.
இதனால் சம்பந்தப்பட்டவர்கள் உளரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.

இவற்றுக்கு மேலாக உயர் அதிகாரிகளுக் குக் கடிதங்கள் எழுதினால் அதற்குப் பதில் இல்லை.

அவ்வாறு பதில் கடிதம் வந்தாலும் காலம் தாழ்த்தி உரிய விளக்கமின்றி அந்தக் கடிதங் கள் உள்ளதென ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இவையயல்லாம் எப்போது நிவர்த்திக்கப்படப் போகின்றன என்ற கேள்வி பதிலற்றுக் கிடக்கிறது.

இவை ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாண செயலகத்துக்கு அண்மையில் இருக்கும் மோட்டார் போக்குவரத்து சாரதிகளுக்கான மருத்துவ பரிசோதனை நிலையத்துக்குச் செல்கின்றவர் களின் குருதி வகை மாறி மாறிப் பதியப்படுகின்றன எனப் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

இவை பத்திரிகைகளில் வெளிவந்தபோதி லும் அது தொடர்பில் யாரும் நடவடிக்கை எடுத் தாகத் தெரியவில்லை.

ஒருவரின் குருதி மாதிரியை பிழையாகப் பதிவு செய்வதன் விளைவு எத்துணை பாரதூர மானதென்பதைக்கூட உணர்ந்து கொள்ள முடி யாதவர்களாக நம்மவர்களின் மனநிலை உள்ளது எனும்போது இது கலிகாலம் என்று கதையை முடித்து விடுவதுதான் புத்திசாலித் தனமென்றாகிறது.

எதுஎவ்வாறாயினும் சாமானிய மக்களை அலைக்கழிப்பது; அவர்களுக்குரிய சேவை யைச் செய்யாமல் காலம் கடத்துவது என அனைத்தும் பாவச் செயலாகும் என்பதை உணர்ந்து கொள்வது இப்பிறவியின் பேற்றைப் பாதுகாக்க உதவும்.

அதேசமயம் மிகுந்த அர்ப்பணிப்போடு சேவை செய்கின்றவர்களின் பணிநிலைகூட, மந்த செயற்பாட்டாளர்களால் மழுங்கடிக்கப்படுவது வேதனையிலும் வேதனை.

                                                                                             நன்றி: யாழ் வலம்புரி
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.