சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரும் புள்ளிகள் - நாட்டையே அதிரவைத்த ஆஷிபா - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Saturday, April 14, 2018

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரும் புள்ளிகள் - நாட்டையே அதிரவைத்த ஆஷிபா

இந்தியாவில் 8 வயது சிறுமியை பொலிஸ் உட்பட எட்டுபேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஆஷிபா கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனாள், அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து சிறுமியின் உடல் வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. 

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சிறுமி ஆஷிபாவை, கோவில் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. 

பல நாட்களாக அந்த சிறுமிக்கு உணவு கூட கொடுக்காமல் மயக்கத்தில் வைத்தே இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர். 

சிறுமி மயக்க நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்திய மருந்தால் சிறுமியின் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது. 

முதலில் கடத்திசென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 18 வயதுக்குட்பட்ட சிறுவனுடன் சேர்ந்து மேலும் 6 பேரும், விசாரணை நடத்தச்சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர், இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கைதான 9 பேரில் காஷ்மீரில் பாஜ அரசியல் புள்ளி ஒருவரின் மகன், பொலிஸ் உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் ஒருவன் என்பது தெரியவந்தது. முதல்வர் மெபூபா முப்தி சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்திட உத்தரவிட்டார். 

சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்தும், காஷ்மீரில் வழக்கறிஞர்கள சங்கத்தினர், வர்த்தக அமைப்பினர், மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தை துவக்கினர். 

இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களும், இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினர்களும் கத்துவாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இது தவிர நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் இந்த கொடூர சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)