முல்லைத்தீவிலிருந்து யாழ் வந்த சிறுமி ஒருவரை காணவில்லை ; பொலிஸாரிடம் முறைப்பாடு - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
Web hosting
BREAKING ****!!

Wednesday, April 25, 2018

முல்லைத்தீவிலிருந்து யாழ் வந்த சிறுமி ஒருவரை காணவில்லை ; பொலிஸாரிடம் முறைப்பாடு

முல்லைத்தீவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சிறுமி ஒருவரை காணவில்லை என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முள்ளியவளை கிழக்கு 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி (வயது15) என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த குறித்த சிறுமி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலி ஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த நிலையில் முள்ளியவளையில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாயார் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தரும்படி  கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சிறுமியை தேடும் பணிகளில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.  

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)