இராணுவத்துடன் இணைந்த புத்தாண்டு களியாட்ட நிகழ்வு - எதிர்த்து ஆர்ப்பாட்டம்!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Monday, April 9, 2018

இராணுவத்துடன் இணைந்த புத்தாண்டு களியாட்ட நிகழ்வு - எதிர்த்து ஆர்ப்பாட்டம்!!

வவுனியா மாவட்ட செலயகம் இராணுவத்தினருடன் இணைந்து நடாத்தும் தமிழ் சிங்கள புத்தாண்டு களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றையதினம்(09-04-2018) திங்கட்கிழமை வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்துடன் இணைந்த புத்தாண்டு களியாட்ட நிகழ்வு - எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
தாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் வவுனியா பிரமான தபாலகத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் 410 ஆவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் வவுனியா மாவட்ட செலயகம் இராணுவத்தினருடன் இணைந்து எதிா்வரும் 10 ஆம் திகதி உறவுகளின் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு களியாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனா்.
இராணுவத்துடன் இணைந்த புத்தாண்டு களியாட்ட நிகழ்வு - எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
தமது பிள்ளைகளை தேடிய தாம் 410 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட செயலகம் வர்த்தகர் சங்கம், பிரதேச செயலகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஒன்றிணைத்து இராணுவத்தினருடன் இணைந்து புதுவருடத்தையொட்டி களியாட்ட நிகழ்வு நடத்துவதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கண்டித்துள்ளனா்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)