யாழில் ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய 19 வயது யுவதிக்கு ஏற்பட்ட கதி!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, May 30, 2018

யாழில் ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய 19 வயது யுவதிக்கு ஏற்பட்ட கதி!!

யாழிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதியொருவர் திடீரென நிலத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(28) பகல் யாழ். சங்குவேலியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். சங்குவேலியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த குறித்த யுவதி வழமை போன்று தனது பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்துள்ளார்.
மயங்கி விழுந்த குறித்த யுவதியை சக பணியாளர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகச் சேர்ப்பித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றிக் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உயிரிழந்த யுவதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்.சங்குவேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த தவராசா கஸ்தூரி(வயது-19) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)