உலகின் மிகவும் வயதான பிரதமராக மலேசிய பிரதமர் பதவி ஏற்ப்பு!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Thursday, May 10, 2018

உலகின் மிகவும் வயதான பிரதமராக மலேசிய பிரதமர் பதவி ஏற்ப்பு!!!

கோலாலம்பூர், மே.10- மலேசிய அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாட்டின் 7ஆவது பிரதமராக துன் டாக்டர் மகாதீர் முகம்மட் பதவியேற்றார்.
நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளயில் நாட்டின் மாமன்னர் ஐந்தாம் முகம்மட் முன்னிலையில் மகாதீர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 92 வயதுடைய துன் மகாதீர் தான் உலகின் ந்த்த பிரதமராகக் கருதப்படுகிறார்.
பதவி பிரமாணத்தின் போது முன் வரிசையில் நின்றிருந்த துன் மகாதீருடன் கைகுலுக்கிவிட்டு, நேராக அரியணையில் அமர்ந்தார். அதன் பின்னர் தமது பத்விப் பிரமாண வாக்குறுதியை அவர் எடுத்துக் கொண்டார்.
பிற்பகல் 4 மணிக்கெல்லாம் பாரம்பரிய உடையில் தனது துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் மகாதீர் அரண்மனைக்கு வந்து சேர்ந்து விட்டார். 5 மணிக்கு அவர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அவரது பதவியேற்பு இரவு 9.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிகேஆர் தலைவர் வான் அஸீசா, பிரிபூமி பெர்சத்து தலைவர் டான்ஶ்ரீ மொகிதீன் யாசின், அமானா நெகாரா தலைவர் முகம்மட் சாபு, மற்றும் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரும் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட மகாதீர் அடுத்து துணைப்பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

                                                                                     நன்றி: வணக்கம் மலேசியா

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)