எதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும் சம்பவம்!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 22, 2018

எதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும் சம்பவம்!!

தூத்துக்குடி: எதிரி நாட்டவரை எல்லையில் சுட்டு வீழ்த்துவது போல ஸ்டெர்லைட் நாசகார ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவிகளை பயங்கர ஆயுதங்கள் மூலம் போலீசார் சுட்டுக் கொல்லும் பயங்கர வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக் கோரி 100 நாட்களாக போராட்டம் நடத்தினர் சுற்றுவட்டார கிராம மக்கள். இதன் உச்சகட்டமாக இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர்.
இதற்காக போலீசாரின் அத்தனை தடைகளையும் தகர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைந்தனர். ஆனால் போலீசார் கண்மூடித்தனமாக காக்கை குருவிகளைப் போல அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றிருக்கிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 10 என தெரியவந்துள்ளது.
அதுவும் பாகிஸ்தான் போன்ற எதிரி நாட்டவரை இலக்கு வைத்து சுட்டுக் கொல்லக் கூடிய ஆயுதங்களுடன் போராட்ட களத்தில் முன்னனியில் நின்றவர்களை இலக்கு வைத்து மார்புகளில் மட்டுமே சுட்டுக் கொன்றனர். இது தொடர்பான பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேலதிக கானொளி பதிவுகள்:

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)