யாழில் சட்ட விரோத தொலைக்காட்சி கேபிள் இணைப்புக்களால் மக்கள் சிரமம்!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 29, 2018

யாழில் சட்ட விரோத தொலைக்காட்சி கேபிள் இணைப்புக்களால் மக்கள் சிரமம்!!


யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புஒன்றை நடாத்திவரும் தனியார் நிறுவனத்தின்(DAN TV) முதலாளியால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறித்த முதலாளி வீடுகளுக்கு கேபிள் இணைப்புக்களை தனது முகவர்கள் ஊடாக வழங்கி வருவதுடன் தனது தொலைக்காட்சி அலைவரிசையையும் அந்த கேபிள் (Cable TV) ஊடாக ஒளிபரப்பி வருகின்றார். குறித்த நிறுவனத்தின் தரம் குறைவான துள்ளியம் குறைவான கேபிள் ரீவி இணைப்புக்களை பொதுமக்கள் தவிர்த்து வந்த அதே நேரம் யாழில் மிகத் தரமான இணைப்புக்களை வழங்கி வந்தவர்களிடம் பொதுமக்கள் கேபிள் இணைப்புக்களை பெற்று பாவித்து வந்தனர்.

இந் நிலையில் குறித்த ரீவி நிறுவனம் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஏனைய கேபிள் ரீவி இணைப்புக்களை விநியோகிப்பவர்கள் மீது அச்சுறுத்தலை வழங்கிவருவதுடன்  தனது அரசியல் செல்வாக்குடன் அரசாங்கத்தின் குறித்த ஒரு அமைப்புடன் சேர்ந்து நீதிமன்றத்தில் பொய்யான வழக்குகளையும் போட்டுள்ளது.
குறித்த நிறுவனம் கேபிள்ரீவி இணைப்புக்களால் வரும் வருமானத்திலும் அரசாங்கத்துக்கு வரி கட்டுவதிலும் பெரும் மோசடி செய்துள்ளதுடன் குறித்த ரீவி நிறுவனத்தின் முதலாளியும் அரசாங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவருக்கு பெருமளவு லஞ்சப் பணத்தை கொடுத்த குற்றச்சாட்டில் விசாரணைகளு்ககு உள்ளாகியிருந்தார்.
குறித்த ரீவி நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் அடுத்த மாதத்துடன் முடிவடைகின்றது. இவ்வாறான நிலையில் இதனை கேபிள் இணைப்பு பெறும் வாடிக்கையளர்களுக்கு மறைத்து குறித்த நிறுவனம் அவர்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி இணைப்பை கொடுத்துள்ளது.

அத்துடன் ரவுடிகளைப் பயன்படுத்தி ஏனைய கேபிள்ரீவி இயக்குனர்களது கேபிள் இணைப்புக்களையும் இரவிரவாக பல இடங்களில் துண்டித்து வருகின்றது. குறித்த ரீவி நிறுவனம் தொடர்பாக ஏனைய கேபிள்ரீவி நடத்துனர்கள் மக்களை விளிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளர்.

ஏனைய கேபிள் ரீவி நடத்துனர்களிடம் அனுமதிப்பத்திரம் இல்லை என கூறி அத்துமீறி வீடுகளுக்கு இணைப்புக்கள் வழங்குவதற்கு குறித்த ரீவி நிறுவன முகவர்கள் வந்தால் அவர்களிடம் கேபிள்ரீவி அனுமதிப்பத்திரம் உள்ளதா என அத்தாட்சிப்பத்திரத்தைக் காண்பித்து உறுதிப்படுத்துமாறும், அடுத்த மாதம் அவர்களது அனுமதிப்பத்திரம் ரத்து செய்தவுடன் கேபிள் இணைப்புக்கள் மூலம் பொதுமக்கள் தொலைக்காட்சி நிகழ்வுகளை பார்க்க முடியாது போய் விடும் என்பதையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளல் அவசியம்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)