திருடர்கள் வீரர்களாகியுள்ளனர்- வீரர்கள் திருடர்களாகியுள்ளனர்: அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, May 30, 2018

திருடர்கள் வீரர்களாகியுள்ளனர்- வீரர்கள் திருடர்களாகியுள்ளனர்: அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!!

கடந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் திருடர்களையும் பிடிக்க தவறியமையால் இன்று வீரர்கள் திருடர்களாகவும், திருடர்கள் வீரர்களாகவும் மாறியுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

நேற்று (29) கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ´கமே பன்சல கமட சவிய´ என்ற நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

´திருடர்களை பிடிப்போம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. மக்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கினார்கள், காரணம் திருடர்களை பிடிக்கவே. 

ஆனால் அதை இன்னும் ஜனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்றவில்லை. இது நாட்டுக்கு துரதிஷ்டமே. அதனால்தான் இன்று திருடர்கள் வீரர்களாகவும் வீரர்கள் திருடர்களாகவும் உள்ளனர். 

கடந்த அரசங்கத்தில் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்கள் இன்று சுதந்திரமாக உள்ளனர். மூன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் எம்மால் இன்னும் கடந்த கால திருடர்களை பிடிக்க முடியாமால் உள்ளது. 

ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள திருடர்களையாவது பிடிக்க முடிந்தமை. குறிப்பாக அர்ஜுன அலோசியஸ்சிடம் பணம் பெற்ற 118 பேரின் பெயர்களை கட்டாயமாக மக்கள் முன் வெளிக்கொண்டு வரவேண்டும்´ என்றார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)