முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றால் பல வீடுகளுக்கு சேதம்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
Web hosting
BREAKING ****!!

Thursday, May 3, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றால் பல வீடுகளுக்கு சேதம்!!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் நேற்று (02) மழையுடன் கடும் காற்று வீசியதால் அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. 

மாலை 3 மாணியளவில் மழை பெய்துகொண்டிருந்ததோடு பலத்த காற்று வீசியுள்ளது. இந்த காற்றின் கோரத்தாண்டவத்தில் குறித்த பகுதியில் இருந்த சுமார் பத்து வீடுகள் வரை சேதமடைந்துள்ளதோடு பயன்தரு மரங்கள் பலவும் முறிந்து விழுந்துள்ளன. 

செதமடைந்த வீடுகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மாங்குளம் பொலிஸார் சென்று பார்வையிட்டுள்ளனர். 

கடந்த 25 ஆம் திகதியும் மாங்குளத்தில் காற்றின் கோரத்தாண்டவத்தால் பல வீடுகள் சேதமாகி அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட முன்னரே மீண்டும் ஒருமுறை காற்றின் கோரத்தாண்டவத்தில் நேற்றும் பல வீடுகள் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)