கடற்படை அதிகாரியை கைது செய்வதற்காக பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ள பொலிஸார்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Thursday, May 3, 2018

கடற்படை அதிகாரியை கைது செய்வதற்காக பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ள பொலிஸார்!!!

கடந்த 2008ம் ஆண்டு கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் 11 நபர்களை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்து கப்பம் பெற்றுக் கொண்டு அவர்களை கொலை செய்த சம்பம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் படி தற்போது வரை கடற்படை அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத் என்பவர் தேடப்பட்டுவரும் சந்தேகநபராவார். 

அதன்படி அவரை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர் வெல்லம்பிட்டிய வென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0112 24 22 176, 0112 23 20 141 அல்லது 0112 23 93 621 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தரலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)