மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 30, 2018

மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்!!

யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மாவா என்ற பெயரில் விநியோகிக்கப்படும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் மாவா விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட பலர் நேற்று நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டுள்ளனர் .

மாவா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் புகையிலை மற்றும் வாசனைத் திரவியங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் வர்த்தகரொருவர் தன்மீதான குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு இன்று  25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் மாவா விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் இளைஞர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும்  ஜூன் மாதம் 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி. சதீஸ்தரன்  இன்று உத்தரவிட்டார்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தலா 2 கிலோ மாவாவுடன்  கோப்பாய் பொலிஸாராலும் யாழ்ப்பாணம் பொலிசாராலும் கைது  செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)