பகிடி வதையால் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மூடப்பட்டது!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 29, 2018

பகிடி வதையால் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மூடப்பட்டது!!

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மருத்துவபீட புகுமுக மாணவர்கள் மீது சிரேஸ்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பகிடிவதையை, கைவிடுவதாக உத்தரவாதம் வழங்கப்படும் வரை மருத்துவ பீடம் மூடப்பட்டிருக்கும் என்று மருத்துவ பீடாதிபதி வைத்தியர் திருமதி அருள்பிரகாசம் அஞ்சலா தெரிவித்துள்ளார்.

மருத்துவபீட மாணவர் சங்கத்திற்கும் பீடாதிபதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று மட்டு. போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் திருமதி அருள்பிரகாசம் அஞ்சலா கருத்த தெரிவிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குறித்த மருத்துவ பீடத்திற்கு முதலாம் ஆண்டிற்கு புதிய மாணவர்கள் சேர்ந்துள்ள போது அவர்கள் மீது சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை செய்து வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள் பலரும் முறைப்பாடுகளை செய்தனர். இதனையடுத்து புதிய மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்ட 5 சிரேஸ்ட மாணவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தொடர்ந்தும் புதிய மாணவர்கள் மீது பகிடிவதை சிரேஸ்ட மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டுவந்த நிலையில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர் முறைப்பாடுகளை செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் குறித்த மருத்துவ பீடம் மூடப்பட்டுள்ளதையடுத்து மாணவர் சங்கத்தினருக்கும் மருத்துவ பீட பீடாதிபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் பகிடிவதையால் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்காலத்தில் பகிடிவதையை எவ்வாறு நிறுத்துவது போன்ற பல கருத்துக்கள் பீடாதிபதிகளால் மாணவர்களுக்கு முன்வைக்கப்பட்டது. இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடல் இடம்பெற்ற போதும் தீர்வு எட்டப்படாத நிலையில் சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதையை நிறுத்துவதற்கு ஒரு செயற்திட்டத்துடன் உத்தரவாதம் வழங்கப்படும் வரை தொடர்ந்து மருத்துவ பீடம் மூடப்பட்டும் என மருத்துவ பீடாதிபதிகள் தீர்மானித்து தீர்மானத்தை வெளியிட்டதையடுத்து கலந்துரையாடல் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)