கிளி/அம்பாள்குளம் கிராமத்தில் 10 பேரை தாக்கி காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 21, 2018

கிளி/அம்பாள்குளம் கிராமத்தில் 10 பேரை தாக்கி காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை!!

கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் இன்று (21) காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. 

இன்று காலை 7 மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் மக்கள் நடமாற்றம் அற்ற காணிக்குள் உட்புகுந்த சிறுத்தை, மாடு கட்டுவதற்கு சென்ற ஒருவரையும், மற்றொருவரையும் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது. 

மதியம் 11 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகை தருவதற்கு இடையில் எட்டு பேரை குறித்த சிறுத்தை தாக்கியிருந்தது. 

பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத்திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் குறித்த சிறுத்தை தாக்கியுள்ளது. 

இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், கிராம பொது மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக்குற்றம் சாட்டினர். 

ஆனால் தங்களின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர். 

பின்னர் பற்றைக்குள் மறைந்திருந்து ஒருவரை தாக்கிய சிறுத்தையை பொதுமக்கள் தடிகளால் அடுத்து கொலை செய்துள்ளனர். 

சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் உட்பட பலர் இருந்துள்ளனர். 

காயமடைந்த 10 பேரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

                                                                                                     
அத தெரண
                                                                                       (கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)