திருகோணமலையில் இரு குழுக்களுக்கிடையே மோதல் - 7 பேர் வைத்தியசாலையில் - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 7, 2018

திருகோணமலையில் இரு குழுக்களுக்கிடையே மோதல் - 7 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் நேற்று (05) இரவு 7.30 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்களில் ஒருவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மரணம் ஆகியுள்ளார். வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பொதுமக்கள் சிலர் சல்லி அம்மன் கோயில் திருவிழாவில் கலந்துக்கொள்ள நடை பவனியாக அலஸ்தோட்டம் பகுதியை கடக்கும் போது தேவா நகர் பிரதேசத்தில் அவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இத்தாக்குதலில் தேவா நகரைச் சேர்ந்த மூவரும் படுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வருமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

                     அத தெரண
(திருகோணமலை நிருபர் கீத்)

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)