வட.சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் வீட்டு வாசலில் பொட்டளமாக கட்டி போடப்பட்ட 7000 ரூபா பணம்!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 12, 2018

வட.சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் வீட்டு வாசலில் பொட்டளமாக கட்டி போடப்பட்ட 7000 ரூபா பணம்!!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில், கிழக்கு மாகாண இளைஞர்கள் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணம் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டிற்கு முன்னால் பொட்டளமாக கட்டி போடப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

அந்த நிகழ்வுக்காக வடமாகாண சபை உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் இருந்து தனது பணத்தை மீளத் தருமாறு, வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா கோரியிருந்தார். 


இந்த நிலையில், கிழக்கு மாகாண இளைஞர்கள், கடந்த வாரம் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி நிதியைச் சேகரித்திருந்தனர். அந்த நிதியை இன்று (12) வடமாகாண சபைக்குக் கொண்டு சென்று மீளக்கையளிக்க முயற்சித்தனர். 

எனினும் அந்தப் பணத்தை பெற்றுக்கொள்ள வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்த போது, முதலமைச்சரை சந்தித்து அந்தப் பணத்தை கையளிக்க முற்பட்டனர். 

                                         

முதலமைச்சரும் பெற்றுக்கொள்ள மறுத்த நிலையில் அந்த பணத்தை கொக்குவில் பகுதியில் உள்ள வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்கு சென்று வாசலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். 

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கொழும்பில் இருப்பதனால், வடமாகாண சபையின் அமர்வில் கலந்துகொள்ளவில்லை. 

அதனால் பாவப்பட்ட பணம் எனப் பொறிக்கப்பட்டிருந்த அந்த பணப் பையை அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு அந்த இளைஞர்கள் சென்றுள்ளனர். 

அத தெரண
(யாழ் நிருபர் சுமித்தி)

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)