புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களை விடுதலை செய்த சுவிஸ் நீதிமன்றம்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, June 15, 2018

புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களை விடுதலை செய்த சுவிஸ் நீதிமன்றம்!!!


தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்காமல் இருக்க சுவிட்சர்லாந்து சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Sample Pic
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் டபிள்யு.ரி.சி.சி அமைப்புக்கும் இடையில் தொடர்ப்பு இருப்பதை காட்ட போதுமானதாக சாட்சிகள் இல்லை எனவும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு என உறுதி செய்ய ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு 18 மாதங்கள் மற்றும் 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அரச தரப்பு சட்டத்தரணி ஜூலியட் நோத்தோ நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்ததுடன், குற்றம் சுமத்தப்பட்ட 13 பேரில் 8 பேர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர். 

ஏனையவர்கள் மட்டுமே மோசடி குற்றத்துடன் தொடர்புடையவர்காக கருதப்பட்டனர். 

அத்துடன் டபிள்யு.ரி.சி.சி யின் நிதி முகாமையாளர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேங்க் நவ் (கிரெடிட் சூசிக்கு சொந்தமானது) வங்கியில் இருந்து கடன் ஒழுங்குகளை செய்து கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரை​ 24 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

டபிள்யு.ரி.சி.சி தலைவர் 21 மாதங்களுக்கும், துணை நிதி முகாமையாளர் 20 மாதங்களுக்கும் இடைநீக்கம் செய்யவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளித்தமை தொடர்பாக 12 சுவிஸ் தமிழர்கள் மற்றும் ஜேர்மன் இனத்தவர் ஒருவருமே கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர். 

குற்றவியலுடன் தொடர்புடைய அமைப்புக்கு உதவியமை, மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தமை, பணச்சலவை மற்றும் கப்பம் பெற்றமை போன்ற குற்றங்களுக்கு எதிராக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

அரச தரப்பு சட்டத்தரணி ஜூலியட் நோத்தோ, விடுதலைப் புலிகள் அமைப்பை அல் கைதா அமைப்பை போன்றது என சித்தரிக்க முயற்சித்துள்ளார். 

இந்த நிலையில், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், புலிகளின் கோரிக்கைக்கு அமைய மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவே டபிள்யு.ரி.சி.சி அமைப்பு சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர்களிடம் நிதி சேகரித்தது என குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)