ரொறொன்ரோ-ஸ்காபுரோவில் சுற்றுவட்டாரத்தையே அதிர்ச்சியடையச் செய்த துப்பாக்கி சூட்டு சம்பவம்!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 16, 2018

ரொறொன்ரோ-ஸ்காபுரோவில் சுற்றுவட்டாரத்தையே அதிர்ச்சியடையச் செய்த துப்பாக்கி சூட்டு சம்பவம்!!

ரொறொன்ரோ-ஸ்காபுரோவில் சுற்றுவட்டாரத்தையே அதரிச்சியடையச்செய்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்காபுரோ குடியிருப்பு தொகுதி ஒன்றில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் ௫ வயது மற்றும் 9-வயதுடைய சிறுமிகள் இருவர் விளையாடிக்கொண்டிருக்கையில் சுடப்பட்டனர். இருவரும் ஸ்காபுரோவில் மக்கோவான் வீதி மற்றும் Steeles அவெனியு பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 5-மணியளவில் இச் சம்பவம் நடந்துள்ளது. அம்புலன்சில் இரு சிறுமிகளும் நோயுற்ற குழந்தைகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒரு சிறுமிக்கு காலிலும் மற்றுமொரு சிறுமிக்கு அடிவயிற்றிலும் சுடப்பட்டுள்ளது. இது மிகவும் வெட்கப்படத்தக்க ஒரு சம்பவம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவர்களில் மிக இளையவள் கடுமையான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 
அங்கு 11 பிள்ளைகள் பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்கையில் கார் ஒன்றில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததாக நம்பபடுகின்றது.
துப்பாக்கியுடன் இறங்கிய நபரின் குறிப்பிட்ட இலக்கு குறிப்பிட்ட இரு சிறுமிகள் என கருதப்படுகின்றது. ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி, ஒன்ராறியோ மாகாண
புதிய முதல்வராக நியமிக்கப்படவுள்ள டக் வோட் மற்றும் ரொறொன்ரோ பொலிஸ் தலைவர் மார்க் சான்டர்ஸ் ஆகியோர் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்ததுடன், பொலிஸ் அதிபர் கூறுகையில் 'இது ஒரு வெறுக்கத்தக்க நடவடிக்கை' எனவும் தெரிவித்துள்ளார்.
இரு சிறுமிகளும் பூரண குணமடைய ரொறொன்ரோ நகரம் முழுவதும் தீவிர குணமடைய வேண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கண்காணிப்பு கமராக்கள் பல இருப்பதால் குற்றவாளியை கண்டறிவது இலகுவாக இருக்கும் எனவும் நம்பபடுகின்றது.
https://globalnews.ca/video/embed/4278342
எட்டு துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்டதாக சாட்சி ஒருவர் CP24 யின் தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)