இலங்கையில் மழையுடனான காலநிலை அதிகரிக்கலாம்!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 21, 2018

இலங்கையில் மழையுடனான காலநிலை அதிகரிக்கலாம்!!!

மழையுடனான காலநிலை அதிகரிக்கலாம்


நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை இன்று சற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மீனவர்கள் கடற்றொழிலின் போது அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)