ஒண்டாரியோ மாகாண தேர்தலில் வரலாறு படைத்த இரு ஈழத்தமிழர்கள்! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, June 8, 2018

ஒண்டாரியோ மாகாண தேர்தலில் வரலாறு படைத்த இரு ஈழத்தமிழர்கள்!

ஒண்டாரியோ, ஜூன். 8- 
லோகன் கணபதிப்பிள்ளை மற்றும் விஜய் தணிகாசலம் ஆகியோர் ஒண்டாரியோ மாகாண தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
கனடாவின் ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம் (வயது 28) என்ற இளைஞர் சுமார் 963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்று நடந்தேறியது.
இதில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் விஜய் தணிகாசலம் என்கிற ஈழத்தமிழர் போட்டியிட்டார்.
இவருக்கு 16,224 வாக்குகள் கிடைத்துள்ளன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கட்சியின் பெலிசியா சாமுவெல் 15,261 வாக்குகளைப் பெற்றார். மேலும் இதே தொகுதியில் மற்றொரு தமிழ்ப் பெண்ணான சுமி  ஷாண் என்பவரும் போட்டியிட்டார். இவர் 8,785 வாக்குகள் பெற்றார்.
42,015 வாக்காளர்கள் வாக்களித்த ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலம் 38.61 விழுக்காடு வாக்குகளும்- பெலிசியா சாமுவெல் 36.32 விழுக்காடு வாக்குகளும் பெற்றனர்.
இதனிடையே ஒண்டாரியோ சட்டமன்றத் தேர்தலில் விஜய் தணிகாசலத்தின் கட்சியான முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 76 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று அக்கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றியது. அடுத்து புதிய ஜனநாயகக் கட்சி 40 இடங்களில் வென்று 2ஆவது இடத்தை பிடித்தது. லிபரல் கட்சி 7 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
மேலும், ஆட்சியைப் பிடித்த முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டக் போர்டு, தமது கட்சியின் இளம் வேட்பாளரான விஜயின் வெற்றிக்கு தம்முடைய பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார். ஒண்டாரியோ மாநில சட்டமன்றத்துக்கு தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)